நிதி அமைச்சகம்
சில நிறுவனங்களுக்கான பதிவு செய்தல் அங்கீகாரங்களுக்கான புதிய நடைமுறைகள் 2020 அக்டோபர் 1 வரை ஒத்திவைப்பு
Posted On:
09 MAY 2020 10:41AM by PIB Chennai
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களுக்கும், பொருளாதாரத்திலும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, சில நிறுவனங்களுக்கான அங்கீகாரம் / பதிவு செய்தல் / அறிவிக்கை செய்தலுக்கான புதிய நடைமுறைகள் அமலாக்கத்தை 2020 அக்டோபர் 1 ஆம் தேதி வரையில் ஒத்திவைக்க சி.பி.டி.டி. முடிவு செய்துள்ளது. எனவே வருமான வரிச் சட்டம் 1961ன் 10(23C), 12AA, 35 மற்றும் 80G பிரிவுகளின் கீழ் அங்கீகாரம் / பதிவு செய்தல் / அறிவிக்கை செய்யப்பட்ட நிறுவனங்கள் 2020 அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து 3 மாத காலத்துக்குள் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது 2020 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், புதிய நிறுவனங்களுக்கான அங்கீகாரம் / பதிவு செய்தல் / அறிவிக்கை செய்தலுக்கான திருத்தப்பட்ட நடைமுறைகள் 2020 அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும்.
இதற்குரிய சட்ட திருத்தங்கள், வரும் காலத்தில் உருவாக்கப்படும்.
கோவிட்-19 தொற்று தாக்குதல் மற்றும் அதன் தொடர்ச்சியான முடக்கநிலை அமல் சூழ்நிலையில் புதிய நடைமுறைகளை வரும் ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து அமல் செய்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்து நிதியமைச்சகத்துக்கு நிறைய முறையீடுகள் வந்தன. புதிய நடைமுறைகளை அமல் செய்வதைத் தள்ளிவைக்க வேண்டும் என்று நிறைய கோரிக்கைகளை வந்திருந்தன.
(Release ID: 1622551)
Visitor Counter : 259
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam