உள்துறை அமைச்சகம்

பீகாரில் வெள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்ய தேசிய நெருக்கடி மேலாண்மை குழு கூட்டத்திற்கு அமைச்சரவை செயலாளர் தலைமை தாங்குகிறார்.

Posted On: 08 MAY 2020 6:14PM by PIB Chennai

பீகார் மாநிலத்தில் நிலவும் வெள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்ய அமைச்சரவை செயலாளர் திரு. ராஜீவ் கவுபா தலைமையில் தேசிய நெருக்கடி மேலாண்மை குழுக் (NCMC) கூட்டம் இன்று நடைபெற்றது.

மாநிலத்தில் அதிக மழை பெய்து வருவதாலும், ஆறுகளில் அதிக அளவு நீர்வரத்து இருப்பதாலும், 16 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

அமைச்சரவை செயலாளர் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு உடனடி மீட்பு மற்றும் நிவாரணப் பணி நடவடிக்கைகளை விரைவாக எடுக்க உத்தரவிட்டார்.  மேலும், நெருக்கடியைச் சந்திக்க அரசு கோரிய அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

எந்திரங்களின் உதவியுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்கள் விரைவாக வெளியேற்றப்படுவதுடன், மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளும் மாநில அரசால் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன, இதில் அனைத்து உதவிகளும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் (NDRF) மற்றும் பிற மத்திய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் மொத்தம் 20 தேசிய பேரிட மீட்புக் குழுவினர் மீட்புப் பணிக்காக களத்தில் உள்ள நிலையில், இவர்களில் ஆறு குழுவினர் பாட்னாவில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர், ஏனெனில் கடந்த மூன்று நாட்களில் அந்தப்பகுதி மிக அதிக மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளது.

விமானப்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் தற்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், நிலக்கரி அமைச்சகத்தின் மூலம் அனுப்பப்பட்ட நான்கு ஹெவி டியூட்டி பம்புகள் இன்று பாட்னாவை அடைகின்றன. இது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து நிமிடத்திற்கு சுமார் 3000 கேலன் நீரை வெளியேற்றும்.

 

***************



(Release ID: 1622199) Visitor Counter : 134