குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறை மூலம் 2019-20iல் சுமார் ரூ.90,000 கோடிக்கு வியாபாரம்.

Posted On: 08 MAY 2020 5:28PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் ``காதி பிராண்ட்''  இந்தியாவில் பரவலாக அனைவராலும் ஏற்கப்படும் பிராண்ட் ஆக மாறியுள்ளது. நீடித்த வளர்ச்சியின் சுற்றுச் சூழலுக்கு உகந்த தயாரிப்புகளாக காதிப் பொருள்களின் உற்பத்தி கடந்த 2015-16இல் இருந்து ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் காதிப் பொருள்களின் விற்பனை சுமார் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

அதேபோல, கிராமத் தொழில்கள் துறையிலும் அபாரமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அத் துறையின் உற்பத்தி மற்றும் விற்பனை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஓராண்டு செயல்பாட்டைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், காதித் துறை 31 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. 2018-19இல் ரூ.3215.13 கோடியாக இருந்த அதன் வியாபாரம், 2019-20இல் ரூ.4211.26 கோடியாக உயர்ந்துள்ளது. கிராமத் தொழில் துறைகளின் வியாபாரம் 2019-20இல் ரூ.84,675.39 கோடியை எட்டியது. முந்தைய ஆண்டில் ரூ.71,077 கோடி என்ற நிலையில் இருந்து இது 19 சதவீதம் வளர்ச்சியைக் காட்டுகிறது.

காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறையின் மொத்தமான வியாபாரம் 2019-20இல் ரூ.88,887 கோடியை எட்டியுள்ளது.

2015-16இல் ரூ.1066 கோடி அளவுக்கு இருந்த காதி உற்பத்தி 2019-20இல் ரூ.2282,44 கோடி அளவுக்கு உயர்ந்து 115 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதேபோல காதி விற்பனையும் அதிகரித்துள்ளது. 2015-16இல் காதி பொருள்களின் விற்பனை ரூ.1510 கோடி என்ற நிலையில் இருந்து 2019-20இல் 179 சதவீதம் அதிகரித்து ரூ.4211.26 கோடியை எட்டியுள்ளது.

கிராமத் தொழில்கள் துறை மூலம் 2015-16இல் ரூ.33,425 கோடிக்கு பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2019-20இல் இது 96 சதவீதம் அதிகரித்து ரூ.65,383.40 கோடிக்கு உயர்ந்தது. கிராமத் தொழில்கள் துறை பொருள்களின் விற்பனை 2015-16இல் ரூ.40,385 கோடியில் இருந்து 2019-20இல் சுமார் 110 சதவீதம் அதிகரித்து ரூ.84,675.39 கோடியை எட்டியுள்ளது.



(Release ID: 1622197) Visitor Counter : 164