நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
பொது முடக்க காலத்தின் போது உணவு தானியங்கள் கொள்முதல் செய்வது துரிதப்படுத்தப்பட்டுள்ளது
Posted On:
07 MAY 2020 6:52PM by PIB Chennai
தேசிய அளவிலான பொதுமுடக்கம் காரணமாக போக்குவரத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், நடப்பு ரபி பருவத்தில் கோதுமை மற்றும் நெல் (இரண்டாவது பயிர்) கொள்முதல் செய்யப்படுவது விரைவு படுத்தப்பட்டுள்ளது. கோதுமையைப் பொறுத்தவரை நானூறு லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கில், மத்திய இருப்புக்கான கொள்முதல் கடந்த மே 6 ம் தேதி வரை 216 லட்சம் மெட்ரிக் டன் அளவை எட்டியது. பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், இது ஏப்ரல் 15ம் தேதி அன்று தான் தொடங்கியது என்பதை வைத்துப் பார்க்கையில், மிகவும் மனதைத் தொடுவதாக உள்ளது. இதேபோல் நெல் கொள்முதல் சுமுகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை அரசு முகமைகள் மூலமாக 44.9 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்முதலில் பஞ்சாப் முதலிடத்தில் உள்ளது – 104.28 லட்சம் மெட்ரிக் டன். இதையடுத்து ஹரியானா 50.56 லட்சம் மெட்ரிக் டன்; மத்தியப் பிரதேசம் 48.64 லட்சம் மெட்ரிக் டன். மத்திய இருப்பு கொள்முதலுக்கு உத்தரப்பிரதேசமும் ராஜஸ்தானும் பங்களித்துள்ளன. இதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன.
நெல் கொள்முதலைப் பொறுத்தவரை, மிகப் பெரிய அளவிலான பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதையடுத்து, உற்பத்தி வெகுவாக அதிகரித்துள்ள தெலங்கானாவில் இருந்து அதிகபட்ச கொள்முதல் செய்யப்பட்டது. சுமார் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தெலங்கானாவில் இருந்து மட்டும் 30 லட்சம் மெட்ரிக் டன் நெல்லும், ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 10 லட்சம் மெட்ரிக் டன் நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டன.
(Release ID: 1622165)
Visitor Counter : 186
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Kannada