பிரதமர் அலுவலகம்
பிரதமர் நரேந்திர மோடி - ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் சார்லஸ் மைக்கேல் இடையே தொலைபேசி உரையாடல்
Posted On:
07 MAY 2020 7:33PM by PIB Chennai
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் திரு சார்லஸ் மைக்கேல் உடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.
இந்தியாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் கோவிட்-19 நிலைமையைப் பற்றியும் பெரும்தொற்றுக்கு எதிரான பதில் நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் உரையாடினார்கள். அத்தியாவசிய மருந்து பொருள்களின் விநியோகத்தை உறுதி செய்வது உட்பட, பெரும்தொற்று சமயத்தில் நிலவி வரும் பரஸ்பர ஒத்துழைப்பை அவர்கள் பாராட்டினார்கள்.
கோவிட்-19 தொற்றின் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்பை சிறப்பாக எதிர்கொள்வதற்கு மண்டல மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பின் அவசியத்தை தலைவர்கள் அங்கீகரித்தனர்.
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே நிலவி வரும் கூட்டு முயற்சியை வலுப்படுத்த தலைவர்கள் உறுதியேற்றுக் கொண்டனர். இந்தியா - ஐரோப்பிய யூனியனின் அடுத்த கூட்டத்துக்கான விரிவான திட்டத்தை அதிகாரிகள் இணைந்து தயாரிப்பார்கள் என அவர்கள் சம்மதித்தனர்.
நெருக்கடியின் புதிய பரிமாணங்கள் குறித்தும் கோவிட்டுக்கு பிறகு ஏற்படும் சூழ்நிலை குறித்தும் தொடர்ந்து ஆலோசனைகள் செய்ய இரு தலைவர்களும் ஒத்துக்கொண்டனர்.
***
(Release ID: 1622163)
Visitor Counter : 178
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam