உள்துறை அமைச்சகம்

கோவிட் 19 தொற்று நோய் காரணமாக இந்தியாவில் தங்க நேர்ந்து விட்ட வெளிநாட்டவர்களுக்கு, இந்தியாவிலிருந்து பயணிகளுக்கான விமான சேவை மீதான தடை விலக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு தூதரக சேவைகள் வழங்கப்படும்

Posted On: 05 MAY 2020 8:03PM by PIB Chennai

கோவிட் 19 தொற்று நோய் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளினால் இந்தியாவிலேயே தங்க நேர்ந்துவிட்ட வெளி நாட்டு குடிமக்களுக்கு இலவச  தூதரக சேவைகள் 3 மே 2020 வரை வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் 17.04.2020 ன்று அறிவித்திருந்தது.. (https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615496).

தற்போது இந்தியாவில் தங்க நேர்ந்துவிட்ட வெளிநாட்டவர்களுக்கு, வெளிநாட்டவர்கள் பதிவு அதிகாரிகள் அலுவலகங்கள்/ வெளி நாட்டவர்களுக்கான அதிகாரிகள் அலுவலகங்கள் மூலமாக, பின்வரும் தூதரக சேவைகள் வழங்கப்படும். இதுகுறித்து கருத்தில் கொள்ளப்பட்டு, இந்தக் காலத்தை மேலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

01.02.2020 நள்ளிரவு முதல், பயணிகளுக்கான சர்வதேச விமானப் பயணங்கள் மீது விதிக்கப்பட்ட, தடை விலக்கப்படும் வரையிலான காலத்தில், காலாவதியான/காலாவதியாகவுள்ள, விசாக்கள், e- விசாக்கள், தங்குவதற்கான நிபந்தனைகள் ஆகியவையும் நீடிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்கள் இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

 

இந்தியாவிலிருந்து பயணிகளுக்கான சர்வதேச விமான பயணத்தின் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் நாளிலிருந்து 30 நாட்களுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்கும் அதிகமான நாட்கள் தங்கியிருந்ததற்காக எந்தவித லெவி அல்லது அபராதத் தொகையும் இல்லாமல் இந்த நீடிப்பு வழங்கப்படும்..

 

வெளியேற விரும்பும் அந்நிய நாட்டவர்களுக்கு அவர்கள் அவ்வாறு வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில், இதேபோல் வழங்கப்படும். இது தொடர்பான அலுவலக ஆணை இந்த இணைப்பில் Click here to see Official Order கொடக்கப்பட்டுள்ளது.

 

                                                                     *****(Release ID: 1621401) Visitor Counter : 106