உள்துறை அமைச்சகம்

வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து அவசரக் காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் பயணங்களுக்கு நிலையான செயல் நடைமுறைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்

Posted On: 05 MAY 2020 8:13PM by PIB Chennai

மே 4, 2020ல் இருந்து பொது முடக்கத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ் ஒரு உத்தரவையும் மற்றும் தொடர்புடைய வழிகாட்டுதல்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் 01.05.2020 அன்று வெளியிட்டது. கோவிட்-19 பெரும்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, பொது முடக்க நடவடிக்கைகள் தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளில் பயணிகளின் வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டன.

வேலை, படிப்பு / பயிற்சி, சுற்றுலா மற்றும் தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக பொது முடக்கத்துக்கு முன்னர் பல்வேறு நாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் அங்கே சிக்கித் தவிக்கிறார்கள்வெளிநாட்டிலேயே நீண்ட காலம் தங்கியிருப்பதால் துன்பத்தை எதிர் கொண்டுள்ள அவர்கள், இந்தியாவுக்கு உடனே திரும்ப விரும்புகின்றனர். மேற்கண்ட நபர்களைத் தவிர, மருத்துவ அவசரம் மற்றும் குடும்ப நபரின் மரணம் காரணமாகவும் நாடு திரும்ப விரும்பும் இந்தியர்களும் இருக்கின்றனர். அதோடு, பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் நபர்கள் பலரும் இந்தியாவில் சிக்கி உள்ளனர்.

இவர்களின் போக்குவரத்துக்கு உதவி செய்வதற்காக, வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மற்றும் அவசரக் காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் குறிப்பிட்ட நபர்களின் பயணங்களுக்காக, இந்திய அரசின் அமைச்சகங்கள் / துறைகள், மாநிலங்கள்  / யூனியன் பிரதேசங்களின் அரசுகள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் அதிகாரிகள் ஆகியோருக்கு போக்குவரத்துக்கான நிலையான செயல் நடைமுறைகளை அவற்றின் கடுமையான அமல்படுத்தலுக்கான வழிகாட்டுதல்களோடு உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு மற்றும் நிலையான செயல் நடைமுறைகளைக் காண இங்கே காணலாம்.

***



(Release ID: 1621398) Visitor Counter : 219