விவசாயத்துறை அமைச்சகம்
ரபி பருவத்தில் 2020-21-ம் ஆண்டுக்கான முழுவீச்சில் நடைபெறும் பருப்புகள், எண்ணெய் வித்துக்கள், கோதுமை கொள்முதல்
Posted On:
05 MAY 2020 6:10PM by PIB Chennai
ரபி பருவத்தில் 2020-21-ம் ஆண்டுக்கான மே 2 ம் தேதி வரையான காலத்தில் 2,61,565 மெட்ரிக் டன் பருப்புகள், 3,17,473 மெட்ரிக் டன் எண்ணெய்வித்துக்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில், ரூ.2,682 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டதன் மூலம், 3,25,565 விவசாயிகள் பயனடைந்தனர். இவற்றில் 14,859 மெட்ரிக் டன் பருப்புகள், 6,706 மெட்ரிக் டன் எண்ணெய் வித்துக்கள் ஆகியவை மே 1 மற்றும் 2-ம் தேதிகளில் மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய 6 மாநிலங்களில் கொள்முதல் செய்யப்பட்டன.
அதோடு, 2020-21-ம் ஆண்டின் ரபி சந்தைப்படுத்துதல் காலத்தில், இந்திய உணவுக் கழகத்துக்கு 1,87,97,767 மெட்ரிக் டன் கோதுமை வந்துள்ளது. இதில், 1,81,36,180 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது.
பிரதம மந்திரியின் விவசாயிகள் நல நிதித் திட்டத்தின்கீழ், பொது முடக்க காலத்தில், மார்ச் 24ம் தேதி முதல் இதுநாள் வரை 9.06 கோடி விவசாயக் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. இதுவரை ரூ.18,134 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
*****
(Release ID: 1621382)