பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

ஆண்டு பொதுக்குழு கூட்டங்களை காணொலி காட்சி அல்லது இதர ஒலி, ஒளி வழிகள் மூலம் நடத்த கார்பரேட் விவகார அமைச்சகம் அனுமதி

Posted On: 05 MAY 2020 7:26PM by PIB Chennai

2019 டிசம்பர் 31-ம் தேதியுடன் நிதியாண்டு முடிவடைந்த நிறுவனங்கள் தங்களது வருடாந்திர பொதுக்குழு கூட்டங்களை 2020 செப்டம்பர் 30ம் தேதி வாக்கில் நடத்துவதற்கு பெருவணிக நிறுவன விவகாரத் துறை அமைச்சகம் 21.4.2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண்.18-2020 மூலம் ஏற்கனவே அனுமதி அளித்தது.

இருப்பினும், சமூக இடைவெளி விதிமுறைகள் மற்றும் மனிதர்கள் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர பொதுக்குழு கூட்டங்களை காணொலி காட்சி மூலமாகவோ அல்லது இதர ஒலி,ஒளி வழிமுறைகள் மூலமோ இந்த 2020-ம் ஆண்டுக்குள் நடத்த அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இந்த நோக்கத்துக்காக பொது சுற்றறிக்கை எண்.20- 2020 இன்று வெளியிடப்பட்டது.

டிஜிடல் இந்தியா தளங்களைப் பயன்படுத்தி. வருடாந்திர பொதுக்குழு கூட்டங்களின் மூலமாக, நிறுவனங்கள் தங்கள் சாதாரண மற்றும் சிறப்பு வர்த்தகங்களை மேற்கொள்ள வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையை

http://www.mca.gov.in/Ministry/pdf/Circular20_05052020.pdf என்ற தளத்தில் காணலாம்.



(Release ID: 1621370) Visitor Counter : 163