ஊரக வளர்ச்சி அமைச்சகம்

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் அரசாங்க மின்சந்தை (GeM) தளத்தில் “சரஸ் சேகரிப்பு” (Saras Collection) தொடங்கினார்.

Posted On: 04 MAY 2020 2:57PM by PIB Chennai

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், புது தில்லியில் உள்ள கிருஷி பவனில் அரசு மின்சந்தை (GeM) தளத்தில் “சரஸ் சேகரிப்பை” இன்று தொடங்கினார். GeM மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தீன்தயாள்ந்தியோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் (DAY-NRLM) தனித்துவ முயற்சியான இந்த சரஸ் சேகரிப்பு, கிராமப்புற சுய உதவிக்குழுக்கள் (சுய உதவிக்குழுக்கள்) தயாரிக்கும் தினசரிப் பயன்பாட்டுத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், கிராமப்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள் சந்தை அணுகலுடன் மத்திய மாநில அரசு வாடிக்கையாளர்களை சென்றடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது

இந்த முயற்சியின் கீழ், சுய உதவிக்குழு விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஐந்து தயாரிப்பு வகைகளில் பட்டியலிட முடியும், அதாவது (i) கைவினைப்பொருள்கள், (ii) கைத்தறி மற்றும் ஜவுளி, (iii) அலுவலக பொருள்கள், (iv) மளிகை, வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், மற்றும் (v) தனிநபர் பாதுகாப்பு, சுகாதாரம். முதல் கட்டத்தில், 11 மாநிலங்களைச் சேர்ந்த 913 சுய உதவிக்குழுக்கள் ஏற்கனவே விற்பனையாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் 442 தயாரிப்புகள் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் நாடு முழுவதும் இருக்கும் அதிக சுய உதவிக்குழுக்களை உள்நுழைக்கும் திறன் கொண்ட மாதிரியை உருவாக்க, GeM, NRLM தரவுத்தளத்தைக் கொண்டு API அடிப்படையிலான ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்கியுள்ளது.

தேசிய, மாநில, மாவட்ட மற்றும் தொகுதி மட்டத்தில் செயல்படுவோருக்கான முகப்புப் பெட்டிகளை (Dashboard) GeM அளிக்கும். இது, சுய உதவிக் குழுக்களால் பதிவேற்றப்பட்ட தயாரிப்புகளின் எண்ணிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்ட ஆர்டர்களின் மதிப்பு மற்றும் அளவு பற்றிய நிகழ் நேரத் தகவல்களை அவர்களுக்கு வழங்கும்.

இந்த முயற்சியில் சுய உதவிக்குழுக்கள் இணைவதற்கான சோதனை ஓட்டம் பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் நடைபெற்றுள்ளது. அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலிருந்தும் ஏராளமான சுய உதவிக்குழுக்கள் தங்கள் தயாரிப்புகளை அரசு வாடிகையாளர்களுக்கு விற்க உதவும் வகையில் இந்த நடவடிக்கை விரைவாக நீட்டிக்கப்படும்.

****************(Release ID: 1621150) Visitor Counter : 238