பாதுகாப்பு அமைச்சகம்
புற ஊதா கிருமி நீக்க கோபுரத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்குகிறது
Posted On:
04 MAY 2020 5:13PM by PIB Chennai
நோய்த் தொற்று அதிகமாகப் பாதிக்கக்கூடிய பகுதிகளில், ரசாயனக் கலப்பில்லாத துரித கிருமி நீக்கத்துக்கான புற ஊதா கிருமி நீக்க கோபுரத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ( Defence Research Development Organisation -DRDO) உருவாக்கியுள்ளது.
புற ஊதா வெடிப்பு என்ற பெயருடைய இந்த உபகரணம், புற ஊதா அடிப்படையிலான கிருமி நாசினியாகும். இதனை, குருகிராமில் உள்ள நியூ ஏஜ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் அன்ட் மெட்டீரியல்ஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் தில்லியைச் சேர்ந்த ஒளிக்கதிர் அறிவியல், தொழில்நுட்ப மையம் (LASTEC) என்னும் முதன்மை ஆய்வுக்கூடம் வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
ரசாயன முறையில் கிருமி நீக்கம் செய்ய இயலாத ஆய்வுக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள கணினிகள், சிறு பொறியமைப்புகள், மின்னணு சாதனங்கள் போன்ற உயர் தொழில்நுட்ப சாதனங்களின் மேல்பரப்புகளில் தொற்று நீக்குவதற்கு இந்த புற ஊதா உபகரணம் பயன்படும். மக்கள் அதிகமாகக் கூடும் விமான நிலையங்கள், வணிக வளாகங்கள், மெட்ரோ ரயில்கள், உணவு விடுதிகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் போன்ற பகுதிகளில் இது சிறந்த முறையில் பயனளிக்கும்.
புற ஊதா அடிப்படையிலான கிருமிநாசினி, மடிக்கணினி, கைபேசி ஆகியவற்றின் வைஃபை இணைப்புடன் தொலை இயக்கம் மூலமாகவும் பயன்படுத்தப்படலாம்.
(Release ID: 1621019)
Visitor Counter : 274
Read this release in:
English
,
Marathi
,
Gujarati
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam