சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்
प्रविष्टि तिथि:
02 MAY 2020 4:36PM by PIB Chennai
கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் சூழ்நிலைகளைக் கையாள்வதில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் படிப்படியாக முன்கூட்டியே சிந்தித்து, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து உயர்நிலை அளவில் மறு ஆய்வு செய்து, கண்காணிக்கப் படுகின்றன.
தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகளை (PPE) சரியான வகையில், தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்கான கூடுதல் வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நேற்று வெளியிட்டது. `தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகளை தேவைக்கேற்ப பயன்படுத்துதல்' தொடர்பாக ஏற்கெனவே வெளியிட்டப்பட்ட வழிகாட்டுதல்களின் தொடர்ச்சியாக இவை அமைந்துள்ளன. விரிவான வழிகாட்டுதல்களை பின்வரும் இணையதளச் சுட்டியில் காணலாம்.:
https://www.mohfw.gov.in/pdf/AdditionalguidelinesonrationaluseofPersonalProtectiveEquipmentsettingapproachforHealthfunctionariesworkinginnonCOVIDareas.pdf
நோய் பாதித்தவர்களில் 9950 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1061 பேருக்கு இந்த நோய் குணமாகியுள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது. நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கையில் 26.65 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 37,336 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றில் இருந்து புதிதாக 2293 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
கோவிட்-19 குறித்த அதிகாரப்பூர்வ மற்றும் அண்மைத் தகவல்கள், நுட்பமான விஷயங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் குறித்த தகவல்களுக்கு தயவுசெய்து பின்வரும் இணையதள சுட்டியைப் பாருங்கள் :
https://www.mohfw.gov.in/.
கோவிட்-19 தொடர்பான நுட்பமான வினவல்கள் இருந்தால் technicalquery.covid19[at]gov[dot]in என்ற மின்னஞ்சலுக்கும், மற்ற வினவல்களுக்கு ncov2019[at]gov[dot]in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.
கோவிட்-19 குறித்த ஏதும் தகவல்கள் தேவைப்பட்டால் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம்: +91-11-23978046 அல்லது 1075 (கட்டணமில்லா தொலைபேசிகள்). கோவிட்-19 குறித்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் உதவி எண்களின் பட்டியல் பின்வரும் இணையதள சுட்டியில் தரப்பட்டுள்ளன:
https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdfHYPERLINK "https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf%20." \t "_blank" .
*****
(रिलीज़ आईडी: 1620450)
आगंतुक पटल : 246
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam