ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு முன்னுரிமை

Posted On: 01 MAY 2020 5:19PM by PIB Chennai

ஜூன் 2020 வரையிலான காலத்திற்கு 75000 வென்டிலேட்டர்கள் செயற்கை சுவாசக்கருவிகள் தேவைப்படும் என்று மதிப்பிடப்ட்டுள்ளதாக மத்திய சுகாதாரக் குடும்ப நலத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தற்போது இருப்பில் உள்ள எண்ணிக்கை 19,398 கருவிகள். கருவிகளை வாங்கும் முகமையான, மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும், பொதுத்துறை நிறுவனமான ஹெச் எல் எல் லைஃப் கேர் நிறுவனம் (HLL Lifecare) EG யின் உத்தரவின் பேரில், 60,884 செயற்கை சுவாசக் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இதுவரை கொடுக்கப்பட்ட மொத்த ஆர்டர்களில் 59,884 செயற்கை சுவாசக் கருவிகள், உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும். ஆயிரம் செயற்கை சுவாசக்கருவிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

 

பிராண வாயு மற்றும் பிராணவாயு சிலிண்டர்களை பொறுத்தவரை, நாடு தன்னிறைவடைந்துள்ளது. ஆக்சிஜன் தயாரிப்பதற்கான மொத்த உற்பத்தித் திறன் 6400MT. இதில் சுமார் 1000MT மருத்துவ பிராணவாயுவிற்காக பயன்படுத்தப்படுகிறது. நாட்டில் பிராணவாயு தயாரிக்கின்ற, 5 பெரிய நிறுவனங்களும், 600 சிறு உற்பத்தியாளர்களும் உள்ளன. சுமார் 450 மருத்துவமனைகளில், அவர்களே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய பிராணவாயு உற்பத்தி முறை உள்ளது. நாட்டில் சுமார் 1050 கிரையோஜெனிக் டேங்கர்கள் உள்ளன.

 

 

வழங்கப்படக் கூடிய வகையிலான, சுமார் 4.38 லட்சம் மருத்துவப் பிராணவாயு சிலிண்டர்கள் உள்ளன. மேலும் 1.03 லட்சம் புதிய மருத்துவ பிராணவாயு சிலிண்டர்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தொழில் துறைக்கான சுமார் 5 லட்சம் பிராண வாயு சிலிண்டர்களையும் தேவைப்பட்டால் மாற்றுவதற்காக கண்டறியப்பட்டுள்ளன.ஏற்கனவே 60,000 சிலிண்டர்களை மாற்றுவதற்கான ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுவிட்டன.

 

 

ஜூன் 2020 வரையிலான காலத்திற்கு, சுமார் 2.01 கோடி ரூபாய் மதிப்பிலான தனிநபர் பாதுகாப்புக் கவச உபகரங்கள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதைடுத்து 2.22 கோடி ரூபாய் மதிப்பிலான தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 1.42 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்களுக்கான ஆர்டர்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான தனிநபர் பாதுகாப்புக் கவசங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

 

ஜூன் 2020 வரையிலான காலத்திற்கு 2.72 கோடி ரூபாய் மதிப்பிலான N 95 முகக்கவசங்கள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து 2.49 கோடி ரூபாய் மதிப்பிலான முகக்கவசங்களுக்கு ஏற்கனவே ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுவிட்டன. இவற்றுள் 1.49 கோடி ரூபாய் மதிப்பிலான முகக்கவசங்களுக்கான ஆர்டர்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான N 95 முகக்கவசங்களுக்கான ஆர்டர்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

 

இதுவரை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR)  நாளொன்றுக்கு 70 ஆயிரம் சோதனைகளை நடத்தும், சோதனை அளவை எட்டியுள்ளது. இதுவரை 9 iலட்சம் சோதனைகளுக்கும் மேல் நடத்தப்பட்டுள்ளன.

 

மனித சக்தியால் இயங்கக்கூடிய RT PCR உபகரணங்கள் சுமார் 35 லட்சம் தேவைப்படும், என்று DHR மதிப்பீடு செய்துள்ளது. அதனடிப்படையில் Probe, Primer, Mastermix ஆகியவற்றுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுநாள் வரை 16.4 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான பொருள்கள் வரப்பெற்றுள்ளன

 

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி மற்றும் வழங்குதல், தொடர்ந்து நடைபெறுவதைக் கண்காணிப்பதற்காக, இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் மருந்தாளுமைத் துறையில் ஒன்றும், தேசிய மருந்தாளுமை விலை அமைப்பில் ஒன்றும் -  என இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. (Department of Pharmaceuticals (DoP) and National Pharmaceuticals Pricing Authority (NPPA))

 

 


(Release ID: 1620298) Visitor Counter : 257