பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மருத்துவம் மற்றும் காவல்துறை பணியாளர்களின் பயன்பாட்டுக்கு கேந்திரிய பந்தர் தயாரித்த 4900க்கும் அதிகமான பாதுகாப்பு உபகரணங்களை டாக்டர் ஜித்தேந்திர சிங் வழங்கினார்

प्रविष्टि तिथि: 01 MAY 2020 5:32PM by PIB Chennai

வடகிழக்குப் பிராந்திய மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொது குறை தீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறைக்கான மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டினார். அவர்களது பணியைப் பாராட்டும் வகையில் அடையாளக் குறியீடாக, கேந்திரிய பந்தர் தயாரித்த கிருமி நாசினி, கைகழுவும் திரவம் உள்பட 4900க்கும் அதிகமான பாதுகாப்பு உபகரணங்களை அவர் வழங்கினார். அமைச்சரின் இல்லத்தில் எளிமையாக நடைபெற்ற சிறிய நிகழ்ச்சியில், சுகாதார அமைச்சகம் மற்றும் தில்லி காவல்துறை பிரதிநிதிகளிடம் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் போது, தனி நபர் இடைவெளி விதிமுறை பின்பற்றப்பட்டது.


(रिलीज़ आईडी: 1620108) आगंतुक पटल : 198
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada