ஆயுஷ்
ஆயுரக்ஷா – கொரோனா தில்லி போலீஸ் பாடல் : அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் வெளியிட்டது
प्रविष्टि तिथि:
30 APR 2020 7:32PM by PIB Chennai
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அகில இந்திய ஆயுர்வேத மருத்துவ நிறுவனமும் தில்லி காவல் துறையும் இணைந்து தில்லியில் “ஆயுரக்ஷா” என்ற நிகழ்ச்சிக்கு இன்று (மே 1 தேதி ) ஏற்பாடு செய்தது. கொரோனா தொற்று ஒழிப்பில் களத்தில் உள்ள தில்லி காவல் துறையினரின் பணிகளைப் பாராட்டும் வகையிலான இந்நிகழ்ச்சியில் “கொரோனா சே ஜங் தில்லி போலீஸ் கே சாங்” (கொரோனாவை எதிர்த்து போரிடுவோம், தில்லி காவல் துறையுடன் இணைந்து பாடுவோம்) என்ற இந்நிகழ்ச்சியில் நெல்லிக்காய் உள்ளிட்டவற்றைச் சேர்த்து தயாரிக்கப்படும் ச்யவனப்ராஷ் லேகியம், அனு தைலம், சீந்தில் என்ற ஒரு வகை மூலிகையில் தயாரிக்கப்பட்ட “சன்ஷமான வத்தி” ஆகிய ஆயுர்வேத மருந்துகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.
இந்த மூலிகைகள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்தியா ராஜேஷ் கோட்சா பங்கேற்றார். “கோவிட் 19” தொற்றுக்கு எதிரான ஆயுர்வேத மருந்துகளைக் கண்டறிவதற்கு ஆயுஷ் அமைச்சகம் ஆய்வு நடத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க களப்பணியில் ஈடுபட்டு வரும் தில்லி காவல் துறையினரின் பணிகளை அவர் பாராட்டினார்.
(रिलीज़ आईडी: 1619994)
आगंतुक पटल : 430