மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கோவிட்-19 தொற்று காரணமான பொது முடக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் கல்வி ஆண்டு குறித்த பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்கள்.
Posted On:
29 APR 2020 8:16PM by PIB Chennai
கோவிட்-19 தொற்று மற்றும் அதனால் ஏற்பட்ட பொது முடக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழக மானியக் குழு ஒரு நிபுணர் குழுவை அமைத்து, தேர்வுகள் மற்றும் கல்வி ஆண்டு தொடர்பான பிரச்சினைகள் மூலம் ஏற்படும் கல்வி இழப்பை தவிர்க்கவும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவும் பரிந்துரைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 27ம் தேதி அன்று நடைபெற்ற ஆணையக்குழு கூட்டத்தில் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டதுடன், தேர்வுகள் மற்றும் கல்வி ஆண்டிற்கான வழிகாட்டுதல்களை அங்கீகரித்தது.
கோவிட்-19 தொற்று நோயைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் மற்றும் கல்வி ஆண்டு குறித்த இந்த மானியக் குழுவின் வழிகாட்டுதல்கள், புதுதில்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' முன்னிலையில் இன்று வெளியிடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மனிதவளத் துறை அமைச்சகத்தின் உயர்கல்வி செயலாளர் திரு அமித் கரே மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
பல்கலைக் கழக மானியக் குழு இன்று வழங்கிய வழிகாட்டுதல்களின் முக்கிய பரிந்துரைகள் பின்வருமாறு:
- இடைநிலை செமஸ்டர் மாணவர்கள்: தற்போதைய மற்றும் முந்தைய செமஸ்டரின் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் தரப்படுத்தப்படும். கோவிட்-19 நிலைமை இயல்பாக காணப்படும் மாநிலங்களில், ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடைபெறும்.
- கடைசி செமஸ்டர் மாணவர்கள்: தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடைபெறும்.
- ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒரு கோவிட்-19 குழு அமைக்கப்பட்டு, கல்வி ஆண்டு செயல்பாடுகள் மற்றும் தேர்வுகள் தொடர்பான மாணவர்களின் பிரச்சினைகளை தீர்க்க அதிகாரம் அளிக்கப்படும்.
- விரைவான முடிவெடுப்பதற்காக பல்கலைக்கழக மானியக் குழு ஒரு கோவிட்-19 குழு உருவாக்கப்பட வேண்டும்.
கோவிட்-19 மற்றும் அதனால் ஏற்பட்ட பொது முடக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் மற்றும் கல்வி ஆண்டு பற்றிய விரிவான வழிகாட்டுதல்களுக்கு இந்த இணைப்பைப் பயன்படுத்தவும்:
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/UGC%20Guidelines%20on%20Examinations%20and%20Academic%20Calendar.pdf
******
(Release ID: 1619899)
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada