பிரதமர் அலுவலகம்

மூத்த நடிகர் ரிஷி கபூர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 30 APR 2020 12:12PM by PIB Chennai

மூத்த நடிகரான ரிஷி கபூர் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

`பன்முகத்தன்மையும், அன்பும், துடிப்பும் நிறைந்தவர்… அவர்தான் திரு ரிஷி கபூர்.  நடிப்புத் திறமையின் உறைவிடமாக இருந்தார். அவருடனான உரையாடல்களை, சமூக ஊடகங்களில்கூட, நான் எப்போதும் நினைவுகூர்வேன். அவர் திரைப்படங்களையும், இந்தியாவின் முன்னேற்றத்தையும் மிகவும் விரும்பினார். அவரது மறைவினால் துயறுற்றேன். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி’, என்று பிரதமர் கூறினார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1619691) வருகையாளர் எண்ணிக்கை : 223