மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மாநில கல்வி அமைச்சர்கள் கல்வித்துறை செயலர்களுடன் காணொலி காட்சி மூலம் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கலந்துரையாடினார்

Posted On: 28 APR 2020 6:22PM by PIB Chennai

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ இணை அமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரேவுடன் இணைந்து காணொலி காட்சி மூலம் இன்று  அனைத்து மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் மற்றும் கல்வித்துறை செயலர்களுடன் கலந்துரையாடினார். 22 மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயலர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இதில், பள்ளிக் கல்வி மற்றும் கல்வியறிவு துறை செயலர் திருமதி. அமிதா கர்வால் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர், தற்போதைய கோவிட்-19 பரவல் நிலை மிகவும் துர்ப்பாக்கியமானது என்றார். அதேசமயம், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலன் ஆகியவற்றை உறுதி செய்ய, அறிவுக்கூர்மையுடன் செயல்பட்டு ,புதிய சோதனைகளை மேற்கொள்ளும் வாய்ப்பாக இந்த நிலையை மாற்றிக் கொள்ளக்கூடிய நேரம் இது என்று அவர் தெரிவித்தார்.

மதிய உணவுத் திட்டத்தை மேம்படுத்த,  கொவிட்-19 தொற்று காரணமாக, ஆண்டு முழுவதும் சமையல் செலவுக்கான (பருப்பு வகைகள், காய்கறிகள், எண்ணெய், மசாலா பொருட்கள், எரிபொருள் கொள்முதல் செலவு) மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு ரூ.7300 கோடியில் இருந்து ரூ.8100 கோடியாக உயர்த்தப்பட்டது. இது 10.99 சதவீதம் அதிகமாகும்.

 

••••••••••••••



(Release ID: 1619196) Visitor Counter : 240