பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கோவிட்-19 தொற்று தாக்குதல் சூழ்நிலையில் இந்திய ஆட்சி பணி அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி தொடர்வதற்கு லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக் கல்வி அகாடமியின் முயற்சிகளுக்கு அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டு

Posted On: 28 APR 2020 5:14PM by PIB Chennai

கோவிட்-19 தொடர்பான பிரச்சினைகள் குறித்து லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக் கல்வி அகாடமி கல்வியாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், மக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று காணொலி காட்சி மூலம் விரிவான கலந்துரையாடல் நடத்தினார். கோவிட் தொடர்பான பிரச்சினைகளை அகாடமி எவ்வாறு கையாள்கிறது என்பது பற்றியும் அமைச்சர் கேட்டறிந்தார். இந்திய ஆட்சி பணி தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு உருவாக்கப்பட்டுள்ள தரநிலைப்படுத்திய அணுகுமுறைகள் பற்றி அவரிடம் விளக்கப்பட்டது. வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுவதாகவும், மாணவர்கள் தங்கள் அறைகளில் இருந்து இதில் பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. விடுதிகளுக்கே உணவு கொண்டு போய் சேர்க்கப்படுவதாகவும், பாத்திரங்களை சுத்தம் செய்தல், அறைகளை சுத்தம் செய்தல் பணிகளை, அதிகாரிகளுக்கான பயிற்சியில் இருப்பவர்களே செய்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. கோவிட்-19 தொடர்பான தகவல்கள் வீடியோ காட்சிகள் உள்ளிட்டவற்றின் மூலம் தெரிவிக்கப்பட்டு, ஆன்லைனில் கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாகவும், அதன் அடிப்படையில் பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நோய்த் தொற்று பரவும் சூழ்நிலையில் அகாடமி சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை, அமைச்சரிடம் அதன் இயக்குநர்  விளக்கினார். கோவிட்-19 பேரழிவு மேலாண்மை மையத்தின் சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்துதல், ஆன்லைன் முறையில் முதல்கட்ட பயிற்சியை நிறைவு செய்தல், மதிப்பீடு செய்தல், திறனாய்வு செய்தல், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள், கோவிட்-19க்கான மருத்துவக் கட்டமைப்பு மேம்பாடு, தேசிய பேரிடர்களில் உதவி கோருவதற்கான  குடிமைப் பணிகள் சங்கம், திபெத்தியர், மத்திய பொதுப் பணித் துறையினர் போன்ற உள்ளூர் பகுதி மக்களை அணுகுதல் ஆகியவற்றில் அளிக்கப்படும் பயிற்சிகள் பற்றி இயக்குநர் விரிவாக விளக்கினார்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய பயிற்சி நடைமுறையை இந்த  அகாடமி உருவாக்கியுள்ளது. அனைத்து பயிற்சி அதிகாரிகளுக்கும் உரிய தகவல்கள் அனுப்புதல் மற்றும் பயிற்சித் தொகுப்புகள் உருவாக்குதல் பணிகள்  அதன் இணையதளம் மூலமாக  நடைபெறுகின்றன. இந்த முயற்சிகளுக்கு உதவியாக இன்டர்நெட் ரேடியோ வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அகாடமியின் முயற்சிகளை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார். நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிக்க இதுபோன்ற பல புதிய முயற்சிகள் எடுக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



(Release ID: 1619039) Visitor Counter : 184