ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கோவிட்-19 நோய்த் தாக்குதல் சூழலில் முதலீடுகளை ஈர்க்க முயற்சிக்க வேண்டும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு. சதானந்த கௌட அறிவுறுத்தியதன்படி வேளாண் - ரசாயனத் திட்டங்களில் கூட்டு முயற்சி முதலீடுகளை ஈர்க்க இந்தியத் தூதரகங்கள் முலம் எச்.ஐ.எல். முயற்சி.

Posted On: 27 APR 2020 5:52PM by PIB Chennai

பொதுத் துறை நிறுவனங்களின் இடையூறு இல்லாத செயல்பாடுகளுக்கு, கோவிட்-19 நோய்த் தொற்று உருவாக்கிய தடைகளை நீக்குவதற்கான முயற்சிகளை ரசாயனங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. முதலீடுகளுக்கான வாய்ப்புகளைத் தேடும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் ஈடுபடும் வாய்ப்பை உருவாக்கி, தன் செயல்பாடுகளைப் பலப்படுத்திக் கொள்ள இத் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. கோவிட்-19 பாதிப்பால் ஏற்பட்ட சூழ்நிலையை ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொண்டு, வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்க முயற்சிக்க வேண்டும் என்று மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு. சதானந்த கௌடா தன்னுடைய அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி இந்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இத் துறையின் கீழ் இயங்கும் மத்திய பொதுத் துறையைச் சேர்ந்த எச்.ஐ.எல். நிறுவனம் தனது தொழில் பகுதி எல்லையை விரிவுபடுத்த முடிவு செய்து, அதற்கான முன்மொழிவுகளை சீனா, ஜப்பான், தென்கொரியாவில் உள்ள இந்தியத் தூதரகங்கள் / துணைத் தூதரகங்களுக்கு அவற்றை அனுப்பியுள்ளது. அந்த நாடுகளில் இருந்து வேளாண் - ரசாயன தொழிலில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்கள், இந்தியாவில் எச்.ஐ.எல். நிறுவனத்துடன் கூட்டு முயற்சியாக முதலீடு செய்ய இதன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி அல்லது குத்தகைத் திட்ட ஏற்பாட்டின் கீழ் இத் திட்டங்கள் வரவேற்கப் படுகின்றன.

கோவிட் நோய்த் தாக்குதல் காரணமாக பல இடையூறுகளை சந்தித்து வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளில் சுகாதாரத் துறையில் DDT போன்ற அத்தியாவசிய ரசாயனங்களையும், வேளாண் துறையில் விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் வழங்குவதை எச்.ஐ.எல். நிறுவனம் உறுதி செய்து வருகிறது.



(Release ID: 1618750) Visitor Counter : 134