நிதி அமைச்சகம்

அறிக்கை எதுவும் கேட்கப்படவில்லை, விசாரணை நடத்தப்படும்; மத்திய நேரடி வரிகள் வாரியம்

Posted On: 26 APR 2020 8:16PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று சூழலைச் சமாளிப்பது பற்றி சில இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) அதிகாரிகள் தங்கள் ஆலோசனைகளை அறிக்கையாக அளித்துள்ளதாக சமூக ஊடகங்களில் இன்று தகவல் வெளியாகி உள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிட்டி) தெரிவித்துள்ளது.

இத்தகைய அறிக்கையைத் தயாரிக்குமாறு ஐஆர்எஸ் அதிகாரிகள் சங்கத்தையோ அல்லது இந்த அதிகாரிகளையோ ஒருபோதும் கேட்கவில்லை என சிபிடிட்டி சந்தேகத்துக்கு இடமின்றி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதிகாரபூர்வ விஷயங்களில், அதிகாரிகள் தங்களது கருத்துக்களையும், யோசனைகளையும் வெளியில் தெரிவிக்க அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. மேலும், இது தற்போது நடைமுறையில் உள்ள நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும். இது தொடர்பாக தேவையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மறுப்புக்குரிய இந்த அறிக்கை, எந்த விதத்திலும் சிபிடிட்டி அல்லது மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ கருத்தைப் பிரதிபலிக்கவில்லை என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(Release ID: 1618643) Visitor Counter : 207