ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
2019 ஏப்ரல் முதல் 2020 ஜனவரி வரை, ரூ.2.68 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்து முதல் முறையாக முதலிடம் பிடித்த ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத் தொழில் துறைக்கு திரு. சதானாந்த கவுடா வாழ்த்து
Posted On:
25 APR 2020 4:44PM by PIB Chennai
நாட்டில் முதல் முறையாக ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத் தொழில் துறை ஏற்றுமதியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளதற்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு. டி.வி.சதானந்த கவுடா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவை ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன உற்பத்தியில் உலக அளவில் மையமாக உருவாக்கவும், உலகுக்கு தரமான ரசாயனப் பொருட்களை விநியோகிக்கவும் இந்தத் துறைக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
இந்தச் சாதனையை நிகழ்த்த தமது துறை பெரும் பங்காற்றியுள்ளதைக் குறிப்பிட்டு திரு.கவுடா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘’ எனது ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத் துறை மேற்கொண்ட தொடர் முயுற்சிகளின் பலனாக, இந்தத் துறை முதல் முறையாக உயர் ஏற்றுமதி பிரிவில் இடம் பிடித்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.
2019 ஏப்ரல் முதல் 2020 ஜனவரி வரை, கடந்த இதே காலத்துடன் ஒப்பிடுகையில், ரசாயனங்கள் ஏற்றுமதி 7.43% உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் ரூ.2.68 லட்சம் கோடிக்கு ரசாயனப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் இது 14.35 % ஆகும்.
(Release ID: 1618232)
Visitor Counter : 199