அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஆராய்ச்சி மேம்பாட்டின் அடிப்படையில் தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் பொருட்களை அளிப்பதுடன், கோவிட்-19 பாதிப்பின் தாக்கத்தைக் குறைக்க கை கிருமிநாசினிகள், சோப்புகள் மற்றும் கிருமி நீக்கப் பொருள்களை அளிப்பதன் மூலம் அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் உடனடி நிவாரணங்களை அளித்துள்ளது
Posted On:
25 APR 2020 4:11PM by PIB Chennai
சார்ஸ்-சி.ஓ.வி.-2 வைரஸ் தாக்குதலுக்கு எதிராக முக்கிய தற்காப்புக் கவசமாக கழிவுகள் அகற்றம் மற்றும் உடல் ஆரோக்கியம் இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பான, ரசாயனம் அல்லாத, ஆல்கஹால் அடிப்படையிலான சிறந்த செயலாற்றல் மிக்க கை கிருமிநாசினிகள் மற்றும் கிருமி நீக்கப் பொருள்களை உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப உடனடியாகத் தயாரிப்பதில் அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் (Council of Scientific & Industrial Research - CSIR), முனைப்பு காட்டியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் குழும ஆய்வகங்கள் இதற்கு நல்ல தீர்வைக் கொடுக்க முன்வந்துள்ளன.
- சி.எஸ்.ஐ.ஆர். ஆய்வகங்களில் இதுவரை சுமார் 50 ஆயிரம் லிட்டர்கள் அளவுக்கு கை கிருமிநாசினிகள் மற்றும் கிருமிநீக்கப் பொருள்கள் உற்பத்தி செய்து பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- காவல் துறை, மாநகராட்சிகள், மின்சாரத் துறையினர், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், பஞ்சாயத்துகள், வங்கிகள் மற்றும் பிற துறையினருக்கு கிருமிநாசினிகள் மற்றும் கிருமிநீக்கப் பொருள்களை வழங்குவதற்கு உள்ளூர்ப்பகுதி நிர்வாகத்தினருடன் இந்த ஆய்வகங்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.
- நாட்டின் தென்பகுதியில் அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் – இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம், ஹைதராபாத் (Indian Institute of Chemical Technology - IICT) மூலம் ஆல்கஹால் அடிப்படையிலான கை கிருமிநாசினி ஜெல் தயாரிப்புக்கு தரநிலை உருவாக்கப்பட்டு, 800 லிட்டர் ஜெல் தயாரித்து தெலங்கானா காவல் துறை மற்றும் பெருநகர ஹைதராபாத் மாநகராட்சித் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் – மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Leather Research Institute - CLRI), காரைக்குடியில் உள்ள அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் – மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்(Central Electrochemical Research Institute). ஆகியவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, மருத்துவக் கல்லூரிகள், காவல் நிலையங்கள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு நூற்றுக்கணக்கான லிட்டர் அளவுக்கு கிருமிநாசினிகளை வழங்கியுள்ளன.
(Release ID: 1618231)
Visitor Counter : 213