அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

முகக்கவசத்தின் மீது, மூக்கடைப்பை நீக்கும் மூலிகை மருந்தைத் தெளித்தால் மூச்சுத் திணறலிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்

Posted On: 25 APR 2020 3:42PM by PIB Chennai

கொரோனா தொற்றைத் தடுக்க முகக் கவசங்களைப் பயன்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்திக் கூறுகின்றனர். அதே சமயம், முகக் கவசங்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் சுவாச அமைப்பில் அடைப்பு ஏற்படுவதாகத் தகவல்கள் வருகின்றன. இந்தப் பிரச்சினையை அணுகுவதற்கு, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்-தேசிய தாவரவியல் ஆய்வு நிறுவனம், லக்னோவை சேர்ந்த விஞ்ஞானிகள்  இணைந்து அடைப்பு நீக்கும் ஒரு மூலிகைத் தெளிப்பானைத் தயாரித்துள்ளனர்.

இதன் மருந்தாக்கம் சளி, இருமலை குணமாக்கி மூச்சுக்குழாயை சுத்தம் செய்வதிலும், அடைப்பை சரி செய்வதில் உதவி, மூச்சு விடுவதை சுலபமாக்குவதற்கும் வழி வகுக்கிறது.

இது அதிக அளவில் தயாராகி கொவிட்-19 எதிர்த்து போராடும் முன்னணி பணியாளர்களுக்கு அனுப்பப்படுவதற்காக, இந்த உறிஞ்சியின் தொழில்நுட்பத்தை வணிகத் தயாரிப்புக்கு வழங்க நிறுவனம் திட்டமிடுகிறது.

                                                                                                                         ***



(Release ID: 1618195) Visitor Counter : 225