உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
கோவிட்-19 பெருந்தொற்றின் போது விமானப் போக்குவரத்து ஊழியர்களும், அத்துறையினரும் ஆற்றிய மிகச் சிறந்த முயற்சிகளுக்காக திரு ஹர்தீப் சிங் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
24 APR 2020 5:27PM by PIB Chennai
கோவிட்-19 பெருந்தொற்றின் போது, உயிர்நாடி உடான் திட்டத்தின்படி நாடெங்கும் உள்ள மக்களுக்கு உயிர் காக்கும் மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு சேர்க்க, சிவில் விமானப் போக்குவரத்து ஊழியர்களும், அத்துறையினரும் ஆற்றிய மிகச் சிறந்த முயற்சிகளுக்காக சிவில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இன்று தமது ட்விட்டரில் இதைத் தெரிவித்துள்ள அமைச்சர், உயிர்நாடி உடான் விமானங்கள் இதுவரை 3,43,635 கிலோ மீட்டர் பயணம் செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உயிர் நாடி உடான் திட்டத்தின்படி ஏர் இந்தியா, அல்லயன்ஸ் ஏர், இந்திய விமானப் படை மற்றும் தனியார் விமானங்கள் ஆகியன 347 விமானங்களை இயக்கியுள்ளன. இவற்றில் 206 விமானங்களை ஏர் இந்தியா, அல்லயன்ஸ் ஏர் நிறுவனங்கள் இயக்கியுள்ளன. இதுநாள்
வரை 591.66 டன் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன .
(வெளியீட்டு அடையாள எண்: 1617905)
வருகையாளர் எண்ணிக்கை : 264
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada