இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்

ஆளில்லாத சிறப்பு குட்டி விமானங்கள் (Drones) மூலம் வாரணாசியில் கொவிட்- கிருமி ஒழிப்புப் பணிகள்

Posted On: 23 APR 2020 6:41PM by PIB Chennai

வாரணாசியில் கொவிட்- 19 கிருமி ஒழிப்புப் பணிகளுக்கு ஆதரவாக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆளில்லாத குட்டி விமானங்களைப் (Drones) பயன்படுத்தும் வசதியை அளிப்பதற்காக, இந்தியாவின் தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான இன்வெஸ்ட் இந்தியா, அக்னி திட்டத்தோடும் இன்வெஸ்ட் இந்தியாவின் தொழில் பாதுகாப்புத் தளத்தோடும் (BIP) நெருக்கமாக இணைந்து செயல்பட உள்ளது.

மக்கள் நெரிசல் மிகுதியான மற்றும் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள் உள்ள பரந்த பகுதிகளில், ஆளில்லாத குட்டி விமானங்கள் மூலம் கிருமி நாசினியைத் தெளித்து, கொவிட் -19 கிருமியிடமிருந்து மாநகர மக்களை அதிகாரிகள் பாதுகாக்கலாம். அதே சமயம், மனிதர்களின் நேரடித் தொடர்பைக் குறைத்து, முன்னணியில் இருக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் அவர்கள் உறுதி செய்யலாம்.

சென்னையை சேர்ந்த ஆளில்லாத குட்டி விமானங்களை தயார் செய்யும் புது நிறுவனமான (ஸ்டார்ட் அப்) கருடா ஏரோஸ்பேசுக்கு வாரணாசியின் கிருமி ஒழிப்பு முயற்சிகளுக்கு துணை நிற்க முடிவெடுத்தது. இதன் தொழில்நுட்பங்களும், பணியாளர்களும் வாரணாசியை அடைவதற்கு இந்தியாவின் தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான இன்வெஸ்ட் இந்தியா, அக்னி திட்டம், இன்வெஸ்ட் இந்தியாவின் தொழில் பாதுகாப்புத் தளம் ஆகியவை அடங்கிய குழு மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து பணியாற்றியது. கொவிட் - 19 எதிர்த்து அரசும், கண்டுபிடிப்பாளரும் இணைந்து போரிட உதவும் விதமாக, இந்தச் செயல்பாட்டின் ஒவ்வொரு கட்டத்தையும் குழு கண்காணித்து ஆதரவளித்தது.

வாரணாசியில் ஆளில்லாத குட்டி விமானப் பணிகள் தற்போது தான் ஆரம்பித்துள்ளன. இதே போன்ற திறன்களை இந்தியாவில் உள்ள இன்னும் பல நகரங்களுக்கு இந்தக் குழு விரிவடைய செய்யும்.

***(Release ID: 1617761) Visitor Counter : 229