பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பிரதமர் இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் பயனாளிகளுக்கு சிலிண்டர்கள் விநியோகத்தை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு தர்மேந்திர பிரதான் வேண்டுகோள்
प्रविष्टि तिथि:
23 APR 2020 7:29PM by PIB Chennai
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்வதில் தொடர்புடைய துறையினர் அனைவரும் திட்டமிட்ட வகையில், அக்கறையுடன் செயல்பட்டு, பிரதமர் இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்வதை விரைவுபடுத்த வேண்டும் என்று பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் ஏழைகள் நலத் திட்ட நிவாரணத் தொகுப்புத் திட்டம் மற்றும் பிரதமர் இலவச சமையல் எரிவாயு திட்டம் ஆகியவற்றின் கீழ் 8 கோடி பயனாளிகள் 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள பெட்ரோலியப் பொருட்கள் மார்க்கெட்டிங் நிறுவனங்களின் (ஓ.எம்.சி.) மாவட்ட முன்னோடி அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் இன்று பேசிய திரு. பிரதான், முன் எப்போதும் இல்லாத கோவிட்-19 தொற்று மற்றும் பொதுமுடக்கநிலை அமல் போன்ற சூழ்நிலையில், ஏழைகளுக்கு அரசு நிவாரணத் தொகுப்புத் திட்டங்களை அளித்துள்ளது. அவற்றில் முக்கிய அம்சமாக இருக்கும் எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக அரசு வழங்குகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். ஏப்ரல் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 40 சதவீத பயனாளிகள் தங்களுடைய சிலிண்டர்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர் என்பதில் இருந்து, சிலிண்டருக்கான பதிவு மற்றும் விநியோகத்தின் வேகம் இன்னும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று தெரிவதாக அவர் தெரிவித்தார். உரிய இலக்கை எட்டுவதற்கு இந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.
பிரதமர் இலவச சமையல் எரிவாயு திட்டப் பயனாளிகளுக்கு உயர் முன்னுரிமை தர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அதேசமயத்தில் மற்ற வாடிக்கையாளர்களுக்கான விநியோகமும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று கூறினார். ஆரோக்கியத்துக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்தல், பொதுமுடக்கநிலை அமலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல், ஆரோக்கிய சேது செயலி பற்றி மக்களுக்குத் தெரிவிப்பதில் மாவட்ட முன்னோடி அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பிகாரில் சுப்பால் பகுதியில் திருடர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழிலாளி துரதிருஷ்டவசமாக மரணம் அடைந்தது குறித்து அமைச்சர் இரங்கல் தெரிவித்தார். கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, இறந்த அந்த தொழிலாளியின் ஆன்மா சாந்தி அடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
(रिलीज़ आईडी: 1617757)
आगंतुक पटल : 226
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada