உள்துறை அமைச்சகம்
நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியருக்கு கோவிட்-19 தொற்று இருந்தால், நிறுவன தலைவர்கள் மீதான சட்ட நடைமுறைகள் : தொழில்துறை சங்கங்கள் எழுப்பியுள்ள அச்சங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்.
Posted On:
23 APR 2020 8:47PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சகம் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், அதிக பாதிப்புகள் இல்லாத மற்றும் கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் சில விதிவிலக்குகளை அளித்து ஏப்ரல் 15ம் தேதி அன்று உத்தரவு ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த விதிவிலக்குகள் இணையதளத்தில் (https://www.mha.gov.in/sites/default/files/MHA%20order%20dt%2015.04.2020%2C%20with%20Revised%20Consolidated%20Guidelines_compressed%20%283%29.pdf) வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்த விதிகள் தொடர்பாக சில தவறான புரிதல்களால் அச்சம் ஏற்பட்டு, அதுபற்றி ஊடகங்களில், உற்பத்திகளை மேற்கொண்டுள்ள சில நிறுவனங்கள் கேள்வி எழுப்பி இருந்தன. அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன :
ஒருவேளை ஆலையில் தொழிலாளி ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மற்றும் அதன் தலைமை நிர்வாக அலுவலருக்கு சிறை தண்டனை அளிக்கப்படும்.
இதுபோன்ற சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் 3 மாதத்துக்கு பூட்டி வைக்கப்படும்.
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கா விட்டால், 2 நாட்களுக்கு நிறுவனம் மூடப்படும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரே நிறுவனம் திறக்க அனுமதி அளிக்கப்படும்.
இந்த அச்சங்களுக்கு உள்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில், இதுபோன்ற எந்த விதியும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் சேர்க்கப்படவில்லை. அதனால், இதுபோன்ற தவறான புரிதல்களால் ஏற்பட்ட அச்சம் தேவையில்லை. எனவே, ஏப்ரல் 15ம் தேதிக்கு முன்பு அனுமதி பெற்று கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகள், புதிதாக நிர்வாகத்திடம் இருந்து எந்த புதிய அனுமதியையும் பெறத் தேவையில்லை. மேலும், சமூக இடைவெளி குறித்த வழிமுறைகளை பின்பற்றி செயல்பட்டால் போதும். ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் புதிதாக உரிமம் அல்லது அனுமதி ஆகியவை தேவையில்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
(Release ID: 1617748)
Visitor Counter : 246