பாதுகாப்பு அமைச்சகம்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கொவிட் -19 வைரஸ் நோய் தொற்று மாதிரிகளைப் பரிசோதிப்பதற்காக, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பால் (DRDO) உருவாக்கப்பட்ட மொபைல் ஆய்வகத்தைத் தொடங்கினார்
Posted On:
23 APR 2020 4:14PM by PIB Chennai
பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO), தொழிலாளர் மாநிலக் காப்பீட்டுக் கழக மருத்துவமனை (ESIC) மற்றும் ஹைதராபாத் தனியார் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய மொபைல் வைராலஜி ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகத்தை (MVRDL), மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் வீடியோ மாநாடு மூலம் இன்று திறந்து வைத்தார்..
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் அரசாங்கம் பல முடிவுகளை சரியான நேரத்தில் எடுத்துள்ளது, இதன் காரணமாக நாட்டில் கொவிட்-19 நோய் தொற்று பரவுவது மற்ற பல நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என, இந்த நிகழ்வில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இத்தகைய உயிர்ப் பாதுகாப்பு (Bio-safety) இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை ஆய்வகத்தை அமைக்க ஆறு மாதங்கள் வரை ஆகும் நிலையில், அதை 15 நாட்களில் அமைத்தது மிகப்பெரிய சாதனை என்று திரு. ராஜ்நாத் சிங் பாராட்டினார். ஒரு நாளில் 1,000க்கும் மேற்பட்ட மாதிரிகளைப் பரிசோதிக்கக் கூடிய இந்த சோதனை வசதி கொவிட்-19 உடன் போராடுவதில் நம் நாட்டின் திறன்களை மேம்படுத்தும் என்றார்.
(Release ID: 1617519)
Visitor Counter : 307
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada