பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளுடன் ஏப்ரல் 24 ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி
Posted On:
22 APR 2020 7:52PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள பல்வேறு கிராம பஞ்சாயத்துகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஏப்ரல் 24ம் தேதி உரையாற்றுகிறார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படும் நாளில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
பொது முடக்கம் காரணமாக, சமூக இடைவெளியை நாடு கடைபிடித்துவரும் நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொள்வோருடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் கலந்துரையாட உள்ளார்.
இந்த நிகழ்ச்சியின்போது, ஒருங்கிணைந்த- கிராம சுவராஜ் இணையதளம் மற்றும் மொபைல் செயலியை திரு.நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் புதிய முயற்சியாக ஒருங்கிணைந்த வலைதளம் அமைந்துள்ளது. இது, கிராம பஞ்சாயத்துகள், தங்களது கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு திட்டத்தைத் தயார் செய்து அமல்படுத்த தனி வழிமுறையாக இருக்கும்.
இந்த நிகழ்ச்சியின்போது, ஸ்வமித்வா திட்டத்தை பிரதமர் தொடங்கிவைக்க உள்ளார். இந்தத் திட்டம், கிராமப்புற இந்தியாவுக்கு ஒருங்கிணைந்து சொத்து சரிபார்த்தல் முறையை வழங்குகிறது; கிராமப்பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதிகள் அதிநவீன மதிப்பீட்டு முறைகள் மூலம் வரையறுக்கப்படும் – ஆளில்லா வான்வழி கண்காணிப்பு கருவிகள் (ட்ரோன்) தொழில்நுட்பத்துடன் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், மாநில பஞ்சாயத்து ராஜ் துறை, மாநில வருவாய்த் துறை மற்றும் இந்திய கணக்கீட்டு அமைப்பு ஆகியவை இணைந்து செயல்படும்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியின்போது, பொதுமக்களுக்கான சரக்குகள் மற்றும் சேவைகள் வழங்குவதை மேம்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றும் பஞ்சாயத்துகளை ஊக்குவிக்கும் திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் சிறப்பாக செயல்படும் பஞ்சாயத்துகள் / மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் விருது வழங்கி கவுரவிக்கும். இந்த ஆண்டில், நானாஜி தேஷ்முக் ராஷ்ட்ரிய கவுரவ் கிராம சபைக்கான விருது, குழந்தைகளுக்கு ஆதரவான கிராம பஞ்சாயத்துக்கான விருது, கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்ட விருது ஆகிய 3 விருதுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்புடைய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும்.
(Release ID: 1617422)
Visitor Counter : 284
Read this release in:
Malayalam
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada