அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19 க்குப் பின் இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க தொழில்நுட்ப தகவல், முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் (TIFAC) சிறந்த வழிமுறைகளை ஆராய்கிறது

Posted On: 21 APR 2020 5:26PM by PIB Chennai

இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) கீழ் உள்ள தன்னாட்சி தொழில்நுட்ப சிந்தனைக் குழுவான தொழில்நுட்ப தகவல், முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் (TIFAC), எதிர்காலத்திற்கான அதன் சிந்தனை ஆணையின் அடிப்படையில், கொவிட் - 19 க்கு பிந்தைய இந்திய பொருளாதாரத்தின் மறுமலர்ச்சியை உத்தேசித்து ஒரு ஆவணத்தை தயாரிக்கிறது..

இந்த ஆவணம் முக்கியமாக மேக் இன் இந்தியா முன்முயற்சிகளை வலுப்படுத்துவது, சுதேச தொழில் நுட்பத்தை வணிகமயமாக்குதல், தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் வெளிப்படையான பொது விநியோக முறையை (PDS) உருவாக்குதல், திறமையான கிராமப்புற சுகாதாரப் பாதுகாப்பு வழங்கல், இறக்குமதியைக் குறைத்தல், வளர்ந்து வரும் தொழில்நுட்ப களங்களான செயற்கை நுண்ணறிவை (Artificial interlligence AI) உபயோகப்படுத்துதல், இயந்திர தொழில்நுட்பத்தை கற்றல், தகவல் பகுப்பாய்வு உள்ளிட்ட பலவற்றையும் ஏற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துகிறது. இது விரைவில் அரசாங்கத்தின் முடிவெடுக்கும் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படும்.

கொவிட் – 19 வைரஸால் பாதிப்படைந்த இந்திய பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கும், அதன் மீதான தாக்கத்தை குறைப்பதற்கும் சிறந்த வழிமுறைகளை தொழில்நுட்ப தகவல், முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் (TIFAC) விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்து வருகிறது, மேலும் இதேபோன்ற சூழ்நிலைகளை எதிர்காலத்தில் கையாளும் உத்திகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

 

************


(Release ID: 1617080) Visitor Counter : 166