குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மேலும் பசுமையான, தூய்மையான பூமியை உருவாக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர்
Posted On:
21 APR 2020 6:15PM by PIB Chennai
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, அனைவரும் முழுமனதுடன் செய்யவேண்டிய குடிமைக் கடமை என்றும், குடிமக்கள் அனைவரும் நமது பூமியை மேலும் பசுமையான, தூய்மையான கோளாக உருவாக்க இணைந்து பாடுபடவேண்டும் என்றும், குடியரசுத் துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகப் புவி நாளையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், “இயற்கையன்னையைப் பாதுகாப்பதற்கு, நாம் மிக உயரிய முக்கியத்துவம் அளிக்கவேண்டும். வளர்ச்சிக்கான திட்டங்களையும், நுகர்வோர் கலாச்சாரம் மிகுந்த வாழ்க்கை முறையையும் மறு சீரமைக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
உலக அளவில் கோவிட்-19 நோய் தாக்கியுள்ள இந்த நேரத்தில், வளர்ச்சி மற்றும் பொருளாதார உத்திகளை மறு பார்வையிட்டு, மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உலகப் புவி நாள் 2020ஆம் ஆண்டின் கருப்பொருள், பருவநிலை செயல்பாட்டை முன்னிறுத்தி உள்ளதைக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், “நாம் நமது கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையேயான ஒன்றோடொன்று இணைந்த வாழ்வின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒன்றோடொன்று தொடர்புடைய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலில் ‘வணிகம்/பணிகள் வழக்கம் போல் உள்ளது’ என்ற அணுகுமுறையை நாம் தொடர முடியாது. ஏனென்றால் நமது ஒவ்வொரு செயலும் சுற்றுச்சூழலைப் பாதிக்கக் கூடியது” என்று கூறினார்
மக்கள் தாமாகவே முன்வந்து இயற்கையைப் பாதுகாக்கும் வீரர்களாக மாற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வருங்காலம் வளமாக அமைய இயற்கையைப் பாதுகாப்பது, கலாச்சாரத்தைப் பேணுவது ஆகியவற்றுக்கான அவசியத்தையும், குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார்.
****
(Release ID: 1617034)
Visitor Counter : 294
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam