உள்துறை அமைச்சகம்

மூத்த குடிமக்களை அவர்கள் வீடுகளுக்கு சென்று பராமரிப்பவர்கள், ப்ரீபெய்டு கைபேசி மீள் நிரப்பு கடைகள், நகரப் பகுதிகளில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பொது முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு

Posted On: 21 APR 2020 9:10PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றை எதிர்த்து போராடுவதற்காக அமலில் உள்ள தேசியபொது முடக்கத்தில் இருந்து சில நடவடிக்கைகளுக்கு விலக்களிக்க உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே விலக்களிக்கப்பட்டுள்ளகுறிப்பிட்ட சேவைகள் நடவடிக்கைகள் குறித்து சில கேள்விகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பான வழிகாட்டுதலில் இவ்வாறு விளக்கம் அளிக்கப்படுகிறது:

* தங்களது வீடுகளில் தங்கி உள்ள மூத்த குடிமக்களின் உதவியாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களை உள்ளடக்கிய உட்கூறு 8 (i) இன் கீழ் உள்ளசமுக பிரிவு.

* ப்ரீபெய்டு கைபேசி இணைப்புகளுக்கானமீள்நிரப்பு கடைகளை உள்ளடக்கிய உட்கூறு 11(v)இன் கீழ் உள்ள பொது வசதிகள்.

* ரொட்டி தொழிற்சாலைகள், பால் பதப்படுத்தும் நிறுவனங்கள், மாவு ஆலைகள், பருப்பு ஆலைகள் போன்ற நகரப் பகுதிகளில் உள்ள உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை உள்ளடக்கிய உட்கூறு 13(i)இன் கீழ் உள்ள அத்தியாவசிய பொருள்களின் விநியோகம்.

அதே சமயம், பொது முடக்க நடவடிக்கைகளில் குறிப்பிட்டுள்ள படி, அலுவலகங்கள், பணிமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டியபொது இடைவெளிக்கான தேசிய பொது முடக்க உத்தரவுகள் மற்றும் நிலையான இயக்க செயல்முறையை உறுதி செய்ய வேண்டும்.

கள அளவில் ஏற்படும் தெளிவற்ற தன்மையை தவிர்க்க, மேற்கண்டவற்றை குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கும் கள நிறுவனங்களுக்கும் முறைப்படி தெரியப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

***


(Release ID: 1617032) Visitor Counter : 236