விவசாயத்துறை அமைச்சகம்
கோவிட்-19 தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தின் போது அத்தியாவசிய பொருள்கள் நாடு முழுவதும் தடையின்றி சென்றடைய அரசின் தலையீடு
Posted On:
21 APR 2020 6:21PM by PIB Chennai
கோவிட்-19 பெரும் தொற்றால் ஏற்பட்டுள்ள தற்போதைய பொது முடக்கத்தின் போது மொத்த சந்தைகளை நெரிசல் இல்லாமல் செய்யவும் விநியோக சங்கிலிகளை ஊக்கப்படுத்தவும், வேளாண் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தேசிய வேளாண் சந்தையின் இணையதளம் மேம்படுத்தப்பட்டு இரு புதிய அம்சங்கள், (அ) கிடங்கு சார்ந்த வியாபார பகுதி மற்றும் (ஆ) விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் பகுதி, சேர்க்கப்பட்டன. கிடங்குகள் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு நிகர்நிலை சந்தைகளாக அறிவிக்கப்பட்டுள்ள கிடங்குகளில் இருந்து விவசாயிகள் தங்கள் பொருள்களை விற்பனை செய்ய, கிடங்கு சார்ந்த வியாபார பகுதி வழிவகை செய்கிறது. மண்டிகளுக்கு நேரில் வராமல், ஆன்லைன் ஏலம் மூலம் விற்பதற்காக, தங்கள் பொருள்களின் புகைப்படம் / தரம் பற்றிய தகவல்களை விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் சேகரிப்பு மையங்களில் இருந்து பதிவேற்றம் செய்ய, விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் பகுதி வழிவகை செய்கிறது. இது வரை 12 மாநிலங்களில் (பஞ்சாப், ஒடிஷா, குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திர பிரேதசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், உத்திர பிரதேசம் ஜார்கண்ட்) உள்ள விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் வியாபாரத்தில் பங்குபெற்றுள்ளன.
மாநில வேளாண் பொருள் சந்தைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் ஒழுங்கு முறையை கட்டுப்படுத்தி விவசாயிகள் / விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் / கூட்டுறவு அமைப்புகள் ஆகியவற்றிடம் இருந்து நேரடி சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்குமாறு அனைத்து மாநில அரசுகள்/ யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சகத்தால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள மாநகரங்கள் மற்றும் நகரங்களுக்கு விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் காய்கறிகளை விநியோகிக்கின்றன. பொருள்களை எடுத்து செல்லுதல் மற்றும் விற்பதில் உள்ள பிரச்சினைகள் உடனுக்குடன் களையப்படுகின்றன. விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு அனுமதிச்சீட்டு / மின்னணு அனுமதிச்சீட்டுகள் வழங்க மாநிலங்கள் ஏற்கனவே முடிவெடுத்துள்ளன.
பொது முடக்கத்தின் போது சமூக இடைவெளிக்கான ஒரு கருவியாக உருவெடுத்துள்ளது. பொருள்களை கையாள்வதில் மனிதக் குறுக்கீடுகளை குறைத்து, அவை எங்கு சேமிக்கப்பட்டு உள்ளனவோ அங்கிருந்தே ஆன்லைன் மூலம் விற்பனை நடப்பதை உறுதி செய்ய மாநிலங்கள் போன்ற மெய்நிகர் வணிக தளங்களை ஊக்குவிக்கின்றன.
விவசாயிகளும் வணிகர்களும், வேளாண் மற்றும் தோட்டக்கலை பொருள்களின் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை போக்குவரத்துக்கு வாகனங்களை தேடுவதில் உதவ, "கிசான் ரத்" என்னும் விவசாயிகளுக்கு உதவும் கைபேசி செயலியை, அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
***
(Release ID: 1617021)
Visitor Counter : 254
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada