பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கடந்த 20 நாட்களில் கோவிட் 19 தொற்று தொடர்பாக இணையதளங்கள் மூலம் பெறப்பட்ட 25000 கும் அதிகமான குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 20 APR 2020 8:05PM by PIB Chennai

கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 20 நாட்களில் கோவிட் 19 தொற்று தொடர்பாக இணையதளங்கள் மூலம் பெறப்பட்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று வடகிழக்கு மண்டல வளர்ச்சி, பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறை, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறைக்கான மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று புதுதில்லியில் தெரிவித்தார்.

 

கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட தேசிய அளவிலான பொது முடக்கத்தையடுத்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள பொதுமக்களிடமிருந்து, கடந்த மூன்று வாரங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் இணையதளத்திற்கு குறைகள் வந்துள்ளன. ஏப்ரல் 1 ம் தேதி அன்று 332 குறைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பதினைந்து தினங்களுக்குள்ஏப்ரல்  16 ம் தேதி அன்று வரப்பெற்ற மொத்த குறைகளின் எண்ணிக்கை 5566 ஆக அதிகரித்தது.

குறைகளுக்கு சராசரியாக, 1.57 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு விடுகின்றன. உடனtடி நடவடிக்கை எடுப்பதாலும், 24 மணி நேரமும் தொடர்ந்து தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருவதாலும் இந்தக் கால வரையறைக்குள் இதைக் கட்டுப்படுத்த சாத்தியமானதற்குக் காரணமாக இருந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை பணியாளர்கள் மற்றும் தேசிய கண்காணிப்பு தாஷ்போர்டு (National Monitoring Dashboard) கையாளுபவர்கள் ஆகியோருக்கு, டாக்டர்.ஜிதெந்திர சிங் பாராட்டு தெரிவித்தார்.



(Release ID: 1616764) Visitor Counter : 136