தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை அறியும் பிரிவு இன்று ஐந்து அதிகாரப்பூர்வ தகவல்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது
Posted On:
20 APR 2020 8:56PM by PIB Chennai
சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் பரவுதலைத் தடுக்கவும், உச்சநீதிமன்றத்தின் கருத்துகளைத் தொடர்ந்தும், சமூக ஊடகங்களில் வைரலாக இருக்கும் வதந்திகளை கண்டுபிடிக்க, விசேஷ பிரிவு ஒன்றை பத்திரிகைத் தகவல் அலுவலகம் உருவாக்கியுள்ளது. “பி ஐ பி உண்மை அறியும் பிரிவு” ட்விட்டர் தலைப்பில் உள்ள இந்தப் பிரிவு மூலம், சமூக ஊடக தளங்களில் பரபரப்பாக இருக்கும் தகவல்களைத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அந்த விஷயங்களின் உண்மைத்தன்மை பற்றி ஆராயப்படுகிறது. அத்துடன் ட்விட்டரில் பிஐபி இந்தியா பெயரிலும், பல்வேறு பிஐபி மண்டல பிரிவுகளின் பெயரிலும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் பதிவிடப்படுகின்றன. ஹேஷ்டேக் பயன்படுத்தி பதிவிடும் இந்தத் தகவல்கள், ட்விட்டர் பயனாளர்களுக்கு உதவுவதாக இருக்கும்.
எந்தவொரு சமூக ஊடக தகவலையும், வரி வடிவம், ஆடியோ மற்றும் வீடியோ தகவலையும், அதன் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக பிஐபி உண்மை அறியும் பிரிவிற்கு -இணைப்பிற்கு யார் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆன் லைனில் https://factcheck.pib.gov.in/ என்ற இணையதள முகவரியிலோ அல்லது +918799711259 என்ற எண்ணில் வாட்ஸப் மூலமோ அல்லது : pibfactcheck[at]gmail[dot]com. என்ற இமெயில் மூலமோ தகவல்களைத் தெரிவிக்கலாம். இதுகுறித்த விவரங்கள் பி.ஐ.பி. இணையதளத்திலும் https://pib.gov.in உள்ளன.
பிஐபி உண்மைஅறியும் பிரிவு இன்று ஐந்து அதிகாரப்பூர்வ தகவல்களை பதிவிட்டுள்ளது. ஸ்க்ரால் என்ற முன்னணி இணையதளம், பிகாரில் ஜெஹானாபாத்தில் வீட்டில் உணவு இல்லாததால் குழந்தைகள் தவளைகளை சாப்பிடுவதாக செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ வைரலாகப் பரவியது.'' இது வதந்தி என கண்டறியப் பட்டுள்ளது. அது பொய்யான தகவல் என்று தெரிய வந்துள்ளது. அந்தக் குழந்தைகளின் வீடுகளில் போதிய உணவுப் பொருட்கள் இருப்பதாக ஜெஹானாபாத் மாவ்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
(Release ID: 1616761)
Visitor Counter : 203