பிரதமர் அலுவலகம்
மக்கள் நிர்வாகப் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு பிரதமர் வாழ்த்து – குடிமைப் பணிகள் தினத்தில் சர்தார் பட்டேலுக்கு மரியாதை
प्रविष्टि तिथि:
21 APR 2020 10:42AM by PIB Chennai
மக்கள் நிர்வாகப்பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குடிமைப் பணிகள் நாளை ஒட்டி இன்று சர்தார் பட்டேலுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்.
`` குடிமைப் பணிகள் நாளான இன்று, மக்கள் நிர்வாகப் பணிகளில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோவிட்-19 நோய்த்தாக்குதலை வெற்றிகரமாக இந்தியா முறியடிப்பதை உறுதிசெய்வதில் இந்த அதிகாரிகளின் பங்களிப்பை நான் பாராட்டுகிறேன். அவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி, உதவி தேவைப்படுவோருக்கு உதவிகள் அளித்து, அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்கிறார்கள்.
குடிமைப் பணிகள் நாளை ஒட்டி, நமது நிர்வாக வரம்புகளை தொலைநோக்கு சிந்தனையுடன் உருவாக்கி, வளர்ச்சி சார்ந்த, கருணையுடன் கூடிய நடைமுறையை வலியுறுத்திய மாபெரும் தலைவர் சர்தார் பட்டேலுக்கு மரியாதை செலுத்துகிறேன்'' என்று பிரதமர் கூறியுள்ளார்
(रिलीज़ आईडी: 1616619)
आगंतुक पटल : 256
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam