மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது கேந்திரிய வித்யாலயா அமைப்பு

Posted On: 20 APR 2020 1:18PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு உதவும் வகையில் கேந்திரிய வித்யாலயா அமைப்பு (கேவிஎஸ்) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  1. இதுவரை, நாடு முழுவதும் 80 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, தனிமைப்படுத்துதல் மையங்களாகப் பயன்படுத்த பல்வேறு ஆணையங்கள் கைவசப் படுத்தியுள்ளன.
  2. பிரதமர் பாதுகாப்பு நிதிக்கு கேவிஎஸ் பள்ளிகளின் ஆசிரியர்கள், இதர ஊழியர்கள் ரூ.10,40,60,536ஐ நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
  3. தரமான கல்வி நேர இழப்பை ஈடுகட்டும் வகையில், ஏராளமான கேவிஎஸ் ஆசிரியர்கள் டிஜிட்டல் தளங்கள் மூலம் மாணவர்களைத் தொடர்பு கொண்டு கற்பித்து வருகின்றனர்.
  4. டிஜிட்டல் வழியாக மாணவர்கள் கல்வி கற்கும் வகையில், அந்த முறையை இயன்றவரை பயன்படுத்தி,  அனைத்து ஆசிரியர்களையும் ஊக்குவிக்குமாறு, அனைத்து பள்ளி முதல்வர்களையும் கேவிஎஸ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
  5. 2020 ஏப்ரல் 7-ம் தேதி முதல், சுவயம்பிரபா இணையதளம் மூலம் இடைநிலை, முதுநிலை வகுப்புளுக்கு தேசிய திறந்த நிலைக் கல்வி நிறுவனத்தின் (என்ஐஓஎஸ்) நிகழ்ச்சிகளை பதிவு செய்தோ அல்லது நேரலையாகவோ பாடம் நடத்துவதற்கான அட்டவனையை கேவிஎஸ் பகிர்ந்து கொண்டுள்ளது.
  6. என்ஐஓஎஸ்-சின் சுவயம்பிரபா வலைதளத்தில் ஸ்கைப் மற்றும் வலைதளக் கலந்துரையாடல் மூலம் கற்பவர்களின் சந்தேகங்களை நேரலையில் நிவர்த்தி செய்யவும், கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் கேவிஎஸ் சில தெரிந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை நியமித்துள்ளது.
  7. நாட்டில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் கலந்துரையாடல் மற்றும் வழிகாட்டுதலுக்கான பிரத்யேக மின்னஞ்சல் உருவாக்கப்பட்டுள்ளது.
  8. 331 பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் பகுதி நேர ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் இல்லாத பள்ளிகளில், அருகாமை பள்ளிகளின் ஆலோசகர்களின் உதவி பெறப்பட்டு வருகிறது.
  9. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமத்தின் (என்சிஇஆர்டி)  வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை பெற்ற, 268 கேந்திரிய வித்யாலயாக்களின் ஆசிரியர்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  10. கடந்த வெள்ளிக்கிழமை வரை, 2393 மாணவர்கள், 1648 பெற்றோரிடம் இருந்து கேள்விகள் பெறப்பட்டு, அவற்றுக்கு சரியான முறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன.

 

--------------(Release ID: 1616447) Visitor Counter : 52