சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட்-19 மேலாண்மை குறித்து ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் ஆய்வு
Posted On:
19 APR 2020 6:08PM by PIB Chennai
மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குச் சென்று கோவிட்-19 மேலாண்மை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மருத்துவமனைகள் ஆயத்தமாக இருக்க வேண்டிய அவசியம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 450 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட்-19 சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தல் வார்டுகள் மற்றும் படுக்கை வசதிகளும் அங்கு உள்ளன.
சளிக்காய்ச்சல் சிகிச்சை பகுதி, தனிமைப்படுத்தல் வார்டுகள், நோயாளிகள் கண்காணிப்பு வார்டுகள், முக்கிய பகுதிகள் / தீவிர சிகிச்சைப் பிரிவுகள், கோவிட் சிகிச்சைப் பகுதிகள், கோவிட் புறநோயாளிப் பிரிவு, கோவிட் சாம்பிள் சேகரிப்புப் பிரிவு, டாக்டர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு உடை மாற்றுதல் வசதிகள் ஆகியவற்றை மத்திய அமைச்சர் பார்வையிட்டார். இந்த வார்டுகளில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு இருப்பிட மருத்துவ அதிகாரி விடுதியில் விசேஷ குளியல், உடை மாற்றும் வசதிகள் செய்யப்பட்டிருப்பது குறித்தும், கிருமிநீக்க ஸ்பிரே வசதி செய்து கொடுத்திருப்பது குறித்தும் அவர் திருப்தி தெரிவித்தார். இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்வதன் சிரமத்தைக் குறைக்கவும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு நோய்த் தொற்று பரவிடாமல் தவிர்க்கவும், அந்த அலுவலர்கள் அருகில் உள்ள ஓட்டல்களில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிட் வார்டில் ஒரு நோயாளியுடன் காணொளிக் காட்சி மூலம் அமைச்சர் உரையாடினார். அவரும் டாக்டர். கோவிட் நோயாளிகளை பரிசோதிக்கும் பணியில் விமான நிலையத்திலும், பிறகு நரேலா தனிமைப்படுத்தல் மையத்திலும் பணியில் ஈடுபட்ட போது நோய்த் தொற்று ஏற்பட்டு அவர் இங்கு சிகிச்சை பெற்று வருகிறார். ``அவர் ஆரோக்கியமாக இருக்கிறார், உடல் நலம் தேறி வருகிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். தனக்குகோவிட் பாதிப்பு வந்தபோதிலும் அவருடைய நம்பிக்கை மிகவும் உற்சாகம் தருவதாக இருக்கிறது'' என்று அமைச்சர் கூறினார்.
(Release ID: 1616333)