உள்துறை அமைச்சகம்

கொவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, வெளி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இயக்கத்திற்கான நிலையான இயக்க நெறிமுறை

அவர்கள் தற்போது தங்கியுள்ள மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற அனுமதி கிடையாது

Posted On: 19 APR 2020 3:37PM by PIB Chennai

கொவிட்-19 வைரஸ் பரவுவதால், தொழில், வேளாண்மை, கட்டுமானம் மற்றும் பிற துறைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் அவர்கள் பணிபுரிந்த வேலை இடங்களிலிருந்து நகர்ந்து, அந்தந்த மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்களால் நடத்தப்படும் நிவாரண / தங்குமிடம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே கூடுதல் புதிய நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், வரும் 2020 ஏப்ரல் 20 முதல் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், இந்தத் தொழிலாளர்கள் தொழில்துறை, உற்பத்தி, கட்டுமானம், விவசாயம் மற்றும் அரசின் நூறு நாள் (MNREGA) பணிகளில் ஈடுபடலாம்.

 

29 மார்ச் 2020, 15 ஏப்ரல் 2020 மற்றும் 16 ஏப்ரல் 2020 தேதியிட்ட உள்துறை அமைச்சகத்தின் முந்தைய உத்தரவுகளின் தொடர்ச்சியாக, மாநில / யூனியன் பிரதேசங்களுக்குள் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை நகர்த்துவதற்கான ஒரு நிலையான இயக்க நெறிமுறையை (SOP) அது சார்ந்தமைச்சகங்களுக்கும் / துறைகளுக்கும் அனுப்பியுள்ள இந்திய அரசு, மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்கள் மற்றும் மாநில / யூனியன் பிரதேச அதிகாரிகள், அதை கடுமையாக செயலாக்குவதற்கான வழிமுறைகளையும் வழங்கியுள்ளது.

மாநில / யூனியன் பிரதேசங்களுக்குள் அவர்களின் இயக்கத்தை எளிதாக்குவதற்கு, பின்வரும் வழிகாட்டுதல்கள் பின்பற்றலாம்:

  • தற்போது மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள நிவாரண / தங்குமிடம் முகாம்களில் வசிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய விவரங்கள்  சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளிடம் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் பல்வேறு வகையான பணிகளுக்கு அவர்களின் தகுதியைக் கண்டறிய அவர்களின் திறன் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

 

  • இந்நிகழ்வில், ஒரு குழுவாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்குத் திரும்ப விரும்பினால், அவர்கள் தற்போது தங்கியுள்ள மாநிலங்களில் பரிசோதிக்கப்பட்ட பின்னர், நோய் அறிகுறியற்றவர்கள்வரவர் பணியிடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

 

  • அவர்கள் தற்போது தங்கியுள்ள மாநில / யூனியன் பிரதேசங்களுக்கு வெளியே அவர்கள் செல்ல முடியாது என்பதை கவனத்தில் கொள்ளலாம்.

 

  • பஸ் பயணத்தின் போது, ​​பாதுகாப்பான சமூக விலகல் விதிமுறைகள் பின்பற்றப்படுவதுடன், சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படி போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் சுத்தப்படுத்தப்படுவதும் உறுதி செய்யப்படும்.

 

  • ஏப்ரல் 15, 2020 தேதியிட்ட ஒருங்கிணைந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதலின் கீழ் வழங்கப்பட்ட கொவிட்-19 நிர்வாகத்திற்கான தேசிய வழிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படும்.

 

  • உள்ளூர் அதிகாரிகள் தொழிலாளர்கள் பயணிக்கும் போது, பயண காலத்திற்கு உணவு மற்றும் நீர் போன்றவற்றையும் வழங்க வேண்டும்.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/19.4.2020%20SOP%20for%20movement%20of%20stranded%20labour%20within%20the%20State%20and%20UT.pdf


 



(Release ID: 1616309) Visitor Counter : 169