வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் இந்திய கம்பெனிகளை சந்தர்ப்பவசத்தால் வாங்குதல் / கையகப்படுத்துதலை தடுப்பதற்காக நடைமுறையில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் அரசு திருத்தம் செய்கிறது

Posted On: 18 APR 2020 3:58PM by PIB Chennai

தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் இந்திய கம்பெனிகளை சந்தர்ப்பவசத்தால் வாங்குதல் / கையகப்படுத்துதலை தடுப்பதற்காக நடைமுறையில் உள்ள நேரடி அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில்(FDI)  திருத்தம் செய்ய இந்திய அரசு பரிசீலனை செய்தது. ஒருங்கிணைந்த அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் கொள்கை 2017இல் உள்ளடங்கி இருக்கும் தற்போதைய கொள்கையின் பத்தி 3.1.1ஐ அரசு திருத்தி அமைத்துள்ளது.  வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை இத்திருத்தம் தொடர்பான பத்திரிகைச் செய்தி எண் 3ஐ (2020 வரிசை) வெளியிட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள நிலை, மற்றும் திருத்தப்பட்ட பிறகான நிலை குறித்த விவரங்கள் கீழே தரப்படுகின்றன:

தற்போதைய நடைமுறை

பத்தி 3.1.1: தடை செய்யப்பட்டுள்ள பிரிவுகள்/செயல்பாடுகள் தவிர ஏனையவற்றில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைக்கு உட்பட்டு இந்தியாவில் வசிக்காத ஒருவர் இந்தியாவில் முதலீடு செய்யலாம்.  ஆனால் வங்கதேசக் குடிமகன் அல்லது வங்கதேசத்தில் செயல்படும் வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனம் அரசு மூலமாக மட்டுமே முதலீடு செய்யமுடியும்.  மேலும் பாகிஸ்தான் குடிமகன் அல்லது  பாகிஸ்தானில் செயல்படும் வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனம் அரசு மூலமாக மட்டுமே முதலீடு செய்யமுடியும்.  அதிலும் பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி நீங்கலாக மற்ற பிரிவுகள் /  செயல்பாடுகளில் முதலீடு செய்யலாம்.  அயல்நாட்டு முதலீட்டுக்குத் தடை செய்யப்பட்டுள்ள பிரிவுகள்/செயல்பாடுகளில் முதலீடு செய்யலாம்.

திருத்தப்பட்ட நிலைமை

பத்தி 3.1.1:

பத்தி 3.1.1(a): தடை செய்யப்பட்டுள்ள பிரிவுகள் / செயல்பாடுகள் தவிர ஏனையவற்றில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைக்கு உட்பட்டு இந்தியாவில் வசிக்காத ஒருவர் இந்தியாவில் முதலீடு செய்யலாம்.  இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கும் நாட்டில் உள்ள ஒருவர் அல்லது இந்தியாவில் முதலீடு செய்வதால் பலன் அடையும் உரிமையாளர் அத்தகைய ஏதாவது ஒரு நாட்டின் குடிமகனாக இருந்தால் அல்லது அங்கிருந்தால், அந்த நாட்டின் அரசு மூலமாகத்தான் முதலீடு செய்ய முடியும். மேலும் பாகிஸ்தான் குடிமகன் அல்லது  பாகிஸ்தானில் செயல்படும் வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனம் அரசு மூலமாக மட்டுமே முதலீடு செய்யமுடியும்.  அதிலும் பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி நீங்கலாக மற்ற பிரிவுகள் / செயல்பாடுகளில் முதலீடு செய்யலாம்.  அயல்நாட்டு முதலீட்டுக்கு தடை செய்யப்பட்டுள்ள பிரிவுகள் / செயல்பாடுகளில் முதலீடு செய்யலாம்.

பத்தி 3.1.1(b) இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் செய்துள்ள அல்லது எதிர்காலத்தில் செய்ய இருக்கின்ற அந்நிய நேரடி முதலீட்டின் உரிமையை மாற்றித் தரும் போது, அதுவும் நேரடியாக அல்லது மறைமுகமாக மாற்றித் தரும்போது, பத்தி 3.1.1(a)வின் கட்டுப்பாடு / எல்லைக்கு உட்பட்டு பலன் பெறும் உரிமை அமையுமானால், அதைத் தொடர்ந்து அத்தகைய பலன் பெறும் உரிமையில் ஏற்படும் மாற்றத்துக்கு அரசு அனுமதி முக்கியமாகும்.

மேற்சொன்ன முடிவு அந்நிய செலாவணி பரிமாற்றச் சட்டம் (The Foreign Exchange Management Act - FEMA) அறிவிப்புத் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும்.


(Release ID: 1615766) Visitor Counter : 358