நிதி அமைச்சகம்
சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், கடந்த 10 நாட்களில் ரூ.5,204 கோடி வருமான வரியை திரும்ப அளித்துள்ளோம் – மத்திய நேரடி வரிகள் வாரியம்
प्रविष्टि तिथि:
17 APR 2020 9:10PM by PIB Chennai
ஏப்ரல் 8, 2020 முதல், சுமார் 8.2 இலட்சம் சிறு வர்த்தக நிறுவனங்களுக்கு (உரிமையாளர்கள், நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள்) ரூ.5,204 கோடி அளவுக்கு கூடுதலாகப் பெறப்பட்ட வருமான வரியை திரும்ப அளித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று தெரிவித்துள்ளது.
கோவிட்-19 தொற்று அச்சுறுத்தல் நிலவும் சூழலில், ஏப்ரல் 8, 2020-இல் வெளியிட்ட செய்திக் குறிப்பின் அடிப்படையில், வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், 5 இலட்சம் ரூபாய் வரை வரியைத் திரும்பப் பெற வேண்டிய சுமார் 14 இலட்சம் பேருக்கு இதுவரை இந்திய அரசு வரியை திரும்ப அளித்துள்ளது. சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறையில் உள்ள சிறு வணிகர்களுக்கு நிவாரணம் அளிப்பதைக் கவனத்தில் கொண்டு, மேலும் ரூ.7,760 கோடி வரியை எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் மத்திய நேரடி வரிகள் வாரியம் வழங்கும்.
திரும்பச் செலுத்த வேண்டிய வரி குறித்து சுமார் 1.74 இலட்சம் வரி செலுத்துவோரிடமிருந்து பதிலை எதிர்பார்த்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. 7 நாட்களில் பதிலளிக்குமாறு நினைவூட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம், பணத்தை விரைவில் திரும்ப அளிக்க முடியும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
****
(रिलीज़ आईडी: 1615665)
आगंतुक पटल : 244