நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

பொது முடக்கத்தின் போது தனது சராசரியை விட இரு மடங்கு அதிகமான உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் நாடு முழுவதும் எடுத்து சென்றது.

प्रविष्टि तिथि: 16 APR 2020 7:23PM by PIB Chennai

 

ஒரு நாளைக்கு சராசரியாக 1.7 லட்சம் மெட்ரிக் டன்கள் என, 3.74 மில்லியன் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்களை ,1335 ரயில் சுமைகளின் மூலம் பொது முடக்கத்தின் போது உபரி மாநிலங்களில் இருந்து எடுத்துச் சென்று, இந்திய உணவுக் கழகம் சாதனை படைத்துள்ளது. இது, அதன் சராசரி இயக்கமான ஒரு நாளைக்கு 0.8 லட்சம் மெட்ரிக் டன்களை விட இரு மடங்கு அதிகமாகும். இதே காலத்தில், பொது விநியோகத் திட்டப் பயனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 3.34 மெட்ரிச் டன் சரக்குகள் நுகர்வு தேவைப்படும் மாநிலங்களில் இறக்கி வைக்கப்பட்டன.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிக்கும் மூன்று மாதங்களுக்கு தலா 5 கிலோ தானியங்களை மூன்று மாதங்களுக்கு அளிக்கும் பிரதமரின் ஏழைகள் மறூவாழ்வு திட்டத்தின் கீழ், 2.56 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன.


(रिलीज़ आईडी: 1615301) आगंतुक पटल : 268
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu , Kannada