மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 4 மாத வாடகையை மோடி அரசு தள்ளுபடி செய்தது

Posted On: 16 APR 2020 6:20PM by PIB Chennai

கொவிட்-19 பெரும் பரவல் விடுத்துள்ளசவால்களையும், அதைத் தொடர்ந்த பொது முடக்கத்தையும் கருத்தில் கொண்டு, இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களில் (STPI) செயல்படும் சிறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாடகை செலுத்துவதில் இருந்து நிவாரணம் அளிக்கும் பெரிய முடிவொன்றை நரேந்திர மோடி அரசு இன்று எடுத்துள்ளது.

01.03.2020 முதல் 30.06.2020 வரை, அதாவது தற்போது வரை நான்கு மாதக் காலத்துக்கு, நாட்டில் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா வளாகங்களில் செயல்படும் இந்த நிறுவனங்களுக்கு, வாடகை தள்ளுபடி அளிக்க மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவுக்கு நாடெங்கிலும் 60 மையங்கள் உள்ளன. கொவிட்-19 காரணமாக உருவாகியுள்ள சிக்கலான சூழ்நிலையில், இந்த மையங்களில் உள்ள நிறுவனங்களுக்கு வாடகை தள்ளுபடி அளிக்கும் நடவடிக்கை தொழிலுக்கு நிவாரணம் அளிக்கும். 60 இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா மையங்களில் இருந்து செயல்படும் 200 தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் அளிக்கும் நிறுவனங்களுக்கு இந்த நடவடிக்கை பயனளிக்கும். 01.03.2020 முதல் 30.06.2020 வரையிலானநான்கு மாதக் காலத்துக்கு இந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வாடகை தள்ளுபடியின் மதிப்பு தோராயமாக ரூ. 5 கோடி ஆகும். இந்த நிறுவனங்களில் நேரடி ஆதரவில் இருக்கும் சுமார் 3,000 தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் துறை ஊழியர்களின் நலன் கருதியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



(Release ID: 1615099) Visitor Counter : 226