பாதுகாப்பு அமைச்சகம்

கொவிட்-19க்கு எதிரான கண்டோன்மென்ட்களின் நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்

Posted On: 16 APR 2020 4:55PM by PIB Chennai

கொரோனோ வைரஸ் (கொவிட்-19) பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் உள்ள 62 இராணுவ வாரியங்கள் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு செய்தார். கொரோனோ வைரசுக்கு எதிராக இராணுவ வாரியங்கள் உறுதிப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சரிடம் பாதுகாப்பு எஸ்டேட்டுகள் தலைமை இயக்குநர் திருமதி. தீபா பாஜ்வா உறுதியளித்தார்.

அனைத்து கண்டோன்மென்ட் பகுதிகளிலும், மருத்துவ சேவைகள், அத்தியாவசிய சுகாதார சேவைகள், குடிநீர் விநியோகம் ஆகியவை குறித்து நடைபெற்று வரும் செய்ல்பாடுகள் பற்றி திருமதி. பாஜ்வா விளக்கினார். தனிமைப்படுத்துதலுக்கான மருத்துவமனைகள், பள்ளிகள், சமுதாயக் கூடங்களைக் கண்டறிய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இராணுவ  முகாம்களில் தங்கியுள்ளவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தனிநபர் இடைவெளியைப் பராமரிக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும்  அமைச்சரிடம் அவர் விளக்கினார். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமுதாய அமைப்புகளின் ஆதரவுடன், பாதிக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு உணவு, ரேசன் பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இராணுவ வாரியங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் உள்ளூர் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக திரு. ராஜ்நாத் சிங்கிற்கு தெரிவிக்கப்பட்டது.


(Release ID: 1615070) Visitor Counter : 253