சுற்றுலா அமைச்சகம்

"உங்கள் தேசத்தை தெரிந்து கொள்ளுங்கள்" என்ற இரண்டாவது வலைதள தொடரில் கொல்கத்தாவின் சிறந்த வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி நாளை தெரிந்து கொள்ளுங்கள்

Posted On: 15 APR 2020 4:58PM by PIB Chennai

சுற்றுலா அமைச்சகத்தின் "உங்கள் தேசத்தை தெரிந்து கொள்ளுங்கள்" (தேக்கோ அப்னா தேஷ்) என்ற வலைதள தொடருக்கு தேசிய முடக்கத்தின் போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த தொடர் பல்வேறு இடங்களின் தகவல்கள் குறித்து தெரிவிப்பதுடன், நமது இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றிய தகவல்களை விரிவாகவும் ஆழமாகவும் விவரிக்கிறது.

நேற்று ஒளிபரப்பப்பட்ட தொடரின் ஒரு பகுதி, தில்லியின் நீண்ட வரலாற்றை அறிமுகப்படுத்தியது. அத்தொடர் ”நகரங்களின் நகரம் - தில்லியின் தனிப்பட்ட நாட்குறிப்பு” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இதற்கு 5700 பதிவுகளுடன் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த தொடரின் முக்கிய அம்சம் சுற்றுலா விழிப்புணர்வு மற்றும் சமூக வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. கீழேயுள்ள இணையத்தின் மூலம் அத்தொடரை முழுமையாகக் காணலாம். https://youtu.be/LWlBc8F_Us4.

தில்லியை பற்றிய இந்த தொடரின் வெற்றிக்குப் பிறகு, இரண்டாவது "உங்கள் தேசத்தை தெரிந்து கொள்ளுங்கள்" (தேக்கோ அப்னா தேஷ்) வலைதள தொடர் நாளை ஏப்ரல் 16ம் தேதி காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை ஒளிபரப்பாகும். இத்தொடர் ‘கொல்கத்தா - கலாச்சாரம் ஒரு சங்கமம்’ என்ற பெயரில் கொல்கத்தா பற்றி அறியும் ஒரு வாய்பை மக்களுக்கு வழங்கும்.

பதிவு செய்ய https://bit.ly/WebinarCalcutta என்ற இணைப்பை தொடர்பு கொள்ளவும்.

*******************


(Release ID: 1614799) Visitor Counter : 173