பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

நாட்டில் கொவிட்-19 பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை கிராம பஞ்சாயத்துகள் எடுத்து வருகின்றன.

Posted On: 14 APR 2020 5:42PM by PIB Chennai

கொவிட்-19 பெரும் தொற்று நோயின் காரணமாக, இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், மாநில அரசுகளுடன் நெருங்கி பணியாற்றி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒவ்வொரு பஞ்சாயத்து அளவிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அவை மற்றவர்களால் சிறந்த நடவடிக்கைகளுக்கான எடுத்துக்காட்டாகப்  பின்பற்றப்படலாம்.

தமிழ்நாட்டில் கண்ணனூர் கிராமப் பஞ்சாயத்தில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேட்டுப்பட்டி கிராமப் பஞ்சாயத்தில், கிராம பஞ்சாயத்திடம் இருந்து நியாய விலை மற்றும் அத்தியாவசிய பொருள்களை மக்கள் வாங்கும் போது தனி நபர் இடைவெளியைக் கடைபிடிக்கின்றனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் உள்ள வடக்கிப்பாளையம் கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புல்லரம்பாக்கம் பஞ்சாயத்து வட்டத்தில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு வண்டிகள் மூலம் காய்கறிகள் விநியோகிக்கப்படுகின்றன. தூய்மைப்படுத்துதலும், கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளும் விருதுநகர் வட்டாரத்தில் பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அந்த மாவட்டத்தில் உள்ள சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வகையான தனி நபர் பாதுகாப்பு உபகரணப் பெட்டிகள் வழங்கப்படுகின்றன.

***



(Release ID: 1614653) Visitor Counter : 165