ரெயில்வே அமைச்சகம்

கோவிட்-19 ஊரடங்கை முன்னிட்டு மே 3, 2020 வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து.

UTS & PRS உட்பட முன்பதிவுகளுக்கான அனைத்து பயணச்சீட்டு கவுன்ட்டர்களும் அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்பட்டு இருக்கும்.

இ-டிக்கெட் உட்பட அனைத்து ரெயில் பயணச்சீட்டுகளுக்கான முன்பதிவும் அடுத்த அறிவிப்பு வரும் வரை நடைபெறாது. ஆனால் ஆன்லைனில் ரத்து செய்வதற்கான வசதி தொடரும்.

ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் முன்பதிவு செய்திருந்தால் முழுக்கட்டணமும் திருப்பித் தரப்படும்.

இதுவரை ரத்து செய்யப்படாதிருந்த ரெயில்களுக்கு பயணச் சீட்டு முன்பதிவு செய்திருந்து, ரெயில் ரத்து செய்யப்பட்டாலும் முழுக்கட்டணமும் திருப்பித் தரப்படும்.

Posted On: 14 APR 2020 1:58PM by PIB Chennai

கோவிட்-19 ஊரடங்கைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளின்படி சொகுசு ரெயில்கள், மெயில் / எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயில்கள், புறநகர் ரெயில்கள், கொல்கத்தா மெட்ரோ ரெயில், கொங்கன் ரெயில்வே உட்பட அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் மே 3, 2020 வரை ரத்து செய்யப்படுகின்றன.

நாட்டின் பல பகுதிகளுக்கும் இன்றியமையாத பொருள்கள் விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், சரக்கு மற்றும் பார்சல் ரெயில் சேவைகள் தொடரும்.

அடுத்த அறிவிப்பு வரும் வரை இ-டிக்கெட்டுகள் உட்பட எந்தவிதமான பயணச்சீட்டுகளுக்கும் முன்பதிவு இருக்காது.  ஆனால், ஆன்லைனில் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணச் சீட்டுகளை ரத்து செய்வதற்கான வசதி தொடரும்.

UTS & PRS -க்கான பயணச்சீட்டு முன்பதிவு கவுன்ட்டர்கள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்பட்டு இருக்கும்.

ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கு முன்பதிவு செய்திருந்தால் அந்தப் பயணச் சீட்டுகளுக்கான முழுக் கட்டணமும் திருப்பித் தரப்படும்.

இதுவரை ரத்து செய்யப்படாத ரெயில்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்து அதை ரத்து செய்தாலும் முழுக்கட்டணமும் திருப்பித் தரப்படும்.

மே 3, 2020 வரை ரத்து செய்யப்பட்ட ரெயில்களைப் பொறுத்து, ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு கட்டணத்தொகையை ரெயில்வே தானாகவே திருப்பிச் செலுத்திவிடும்.  பயணச்சீட்டுகளை கவுன்ட்டர்களில் வாங்கி இருந்தால், கட்டணத்தை ஜுலை 31, 2020 வரை திருப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.


(Release ID: 1614341) Visitor Counter : 252