திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

கோவிட் 19 தொற்று ஒழிப்பில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு நடவடிக்கைகள்

Posted On: 14 APR 2020 11:33AM by PIB Chennai

நாடு முழுவதும் பரவிவரும் “கோவிட் 19” தொற்று ஒழிப்பது குறித்தும் அது தொடர்பான பணிகளுக்கு உதவவும் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    1. நாடு முழுவதும் உள்ள சுகாதாரத் துறையைச் சார்ந்த நிபுணர்களின் கைபேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட தொடர்பு விவரங்களை அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கும் அமைச்சகம் அனுப்பியுள்ளது.
    2. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் (பயிற்சி) இது தொடர்பாக கடந்த மார்ச் 31ம் தேதி தகவல் அனுப்பியுள்ளார். அதில், தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள் உள்பட 33 கள நிறுவனங்களின் இடங்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் தனிமை வார்டுகள், தாற்காலிக மருத்துவ முகாம்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை தவிர, அந்தந்த மாநிலங்களில் உள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்களின் இடங்களையும் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய நிறுவனங்கள் அரசு நடத்தும் 3,055 ஐடிஐ நிறுவனங்கள் உள்பட மொத்தம் 15,697 நிறுவனங்கள் இயங்குகின்றன. மாநிலங்கள் ஏற்கெனவே பல்வேறு வசதிகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள் சென்னையில் உள்ள விடுதியை தனிமை வார்டாகப் பயன் படுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடையாளம் கண்டுள்ளது.

 

    1. கோவிட் 19 தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக எழுத்தறிவற்றோர்க்குத் தொழிற்பயிற்சி தரும் ஜன சிக்ஷ்யான் சன்ஸ்தான்” மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி முகக் கவசங்களைத் தயாரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி நாடு முழுவதும் நாடு முழுவதும் 17 மாநிலங்களில் 99 மாவட்டங்களில் 101 ஜன சிக்ஷ்யான் சன்ஸ்தான்” அமைப்புகள் மொத்தம் 5 லட்சம் முகக் கவசங்களை இதுவரை தயாரித்துள்ளன. பிரதமர் கபாதுகாப்பு நல நிதிக்காக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகளும் பணியாளர்களும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர். அத்துடன் கம்பெனி சமூகப் பொறுப்பு நிதியும் சேர்த்து மொத்தம் ரூ. 3.23 கோடி கிடைத்துள்ளது. அத்துடன், நாடு முழுவதும் உள்ள 2022 ஐடிஐ நிறுவனங்கள் மொத்தம் ரூ. 1.45 கோடி அளவுக்கு பிரதமர் நலன் நிதிக்கு இன்று வரையில் வழங்கியுள்ளன.
    2. இந்தப் பயிற்சியில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக பிரதம மந்திரி திறன்மேம்பாட்டுத் திட்டத்தை  செயல்படுத்த உதவும் வகையில் வடகிழக்கில் உள்ள 8 மாநிலங்களில் காலக் கெடுவையும் மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் மே 31ம் தேதி வரையில் நீடித்துள்ளது.
    3. ஐடிஐ நிறுவனங்கள் மூடப்பட்டபோது, பயிற்சி நீடிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

(Release ID: 1614304) Visitor Counter : 193