நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களின் உணவுத்துறை அமைச்சர்களுடன் திரு.ராம்விலாஸ் பஸ்வான் காணொளி காட்சி மூலம் உணவு தானியங்கள் விநியோகம் குறித்து சீராய்வு செய்தார்

Posted On: 13 APR 2020 8:22PM by PIB Chennai

பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிப் பொருட்கள் பதுக்கலோ அல்லது அதன் விலையேற்றமோ இல்லாததை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு, பொது விநியோகத்துறை மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர்களுடன் இன்று நடந்த காணொளி காட்சி மூலமான ஆலோசனையின் போது, மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு.ராம்விலாஸ் பஸ்வான் இதை தெரிவித்தார். உள்ளூர் சந்தைகளில் நியாயமான விலையில் அத்தியாவசிப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய சிறிய அளவிலான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் மாநிலங்கள், இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான அதிகாரங்களை பெற்றுள்ளன என்று திரு.ராம்விலாஸ்  பஸ்வான் கூறினார்.

ரபி சந்தை பருவ கோதுமையை ஏப்ரல் 15ம் தேதி முதல்,  கொள்முதல் செய்வதற்கான பணிகளை தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்று திரு.ராம்விலாஸ் பஸ்வான் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்கோள்களின்படி, இந்த கொள்முதல் பருவத்தில் சமூக இடைவெளியை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் திரு.பஸ்வான் கூறினார். பணியில் ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த விவரம் தயாரிக்கப்பட்டு, அனைத்து கொள்முதல் மையங்கள், கிடங்குகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பி  வைக்கப்படும். மேலும், தொழிலாளர் பற்றாக்குறை இல்லாத நிலையும் உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலக்குகளை எட்டுவதற்கு போதுமான அளவு உணவு தானிய இருப்புக்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்கப்படும் என்று திரு.பஸ்வான் கூறினார்.



(Release ID: 1614238) Visitor Counter : 106